college

UGC UG Degree Changes : உயர்கல்வியில் மாணவர்களின் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுவதாக யுஜிசி தலைவர் எம். ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார். அதன்படி, மாணவர்கள் விரும்பினால் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் வகையில் புதிய நடைமுறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

UGC UG Degree New Changes : சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் யுஜிசி தலைவர் எம். ஜெகதிஷ் குமார் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்கள் விரும்பினால் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் வகையில் புதிய நடைமுறை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

பிரதமரின் வித்யாலட்சுமி கல்விக்கடன்
உயர்கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்கள் சேர்ந்து கல்வி பயிலும் வகையில் பிரதமரின் வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்கள் படிக்க முடியும்.

தாய்மொழியில் உயர் கல்வி
ஆங்கிலத்தை தகவல் தொடர்புக்காக ஒரு மொழிப் பாடமாக படித்தால் போதுமானது. ஆங்கில மொழி பிரச்னையால் பெரும்பாலான மாணவர்களுக்கு உயர்கல்வி தடையாக இருக்கிறது. எனவே, அவர்களுக்கு தாய்மொழியில் உயர்கல்வி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திகிறோம். உலகில் முன்னேறிய நாடுகளில் தாய்மொழியில்தான் உயர்கல்வி வழங்கப்படுகிறது.

உயர்கல்வியில் சீர்த்திருத்தங்கள்
மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை, சுயதொழில் ஆர்வத்தையும் மேம்படுத்தும் வகையில் திறன் சார்ந்த கல்லி அளிக்கப்பட வேண்டும். இதனை கருத்தின் கொண்டு உயர்கல்வியில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் கொண்டுவரப்படுகிறது. மாணவர்கள் சிறந்து விளங்கும் தொழில் திறனை அங்கீகரிக்கும் வகையில், தொழில் அறிவுக்கு கிரெடிட் வழங்குவது தொடர்பாக முடிவெடிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே பட்டப்படிப்பை முடிக்கலாம்

வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைக்கு ஏற்ற சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறைக்கும், அதே போன்று, படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கூடுதல் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் புதிய முறைக்கும் யுஜிசி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

பட்டப்படிப்பிற்கான புதிய நடைமுறை
யுஜிசி தலைவர் தகவலின்படி, புதிய நடைமுறையில் மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டு மற்றும் 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை 1 ஆண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே முடிக்கலாம். அதே போன்று, படிப்பில் சற்று பின்தங்கிய மாணவர்கள் விரும்பினால் 6 மாதங்கள் அல்லது 1 வருடம் கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளலாம். இந்த புதிய நடைமுறை வரும் கல்வி ஆண்டில் முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Nandri samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *