TNPSC-LOGO

TNPSC Group 4 and Group 2 Exam 2024 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் மூலம் தமிழக அரசின் இருக்கும் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வுகளை லட்சக்கணக்கான இளைஞர்கள் எழுதி வருகின்றனர். 2024-ம் ஆண்டுக்கான அனைத்து தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டப்படி நடத்தி வருகிறது.

TNPSC Group 4 and Group 2 Results 2024 : தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் 10 தேர்வுகள் நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு இருந்தது. அதன்படி, அனைத்து தேர்வுகளுக்கான அறிவிப்பை திட்டமிட்டப்படி வெளியிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 எழுதிய தேர்வர்களுக்கு இந்தாண்டு முடிவடைவதற்குள் முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப் 1,2,3,4,5ஏ ஆகிய தேர்வுகளும், தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வுகளும், துறை தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதில் அதிக காலிப்பணியிடங்களை நிரப்பும் அடிப்படையில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடைபெறுகிறது.

லட்சக்கணக்கில் தேர்வெழுதும் இளைஞர்கள் :

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளை லட்சக்கணக்கில் தேர்வர்கள் எழுதுக்கின்றனர். இதர தேர்வுகளை காட்டிலும் இத்தேர்வுகளை எழுதுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகளவில் உள்ளது. 2024-ம் ஆண்டு இந்த குரூப் 2 தேர்வை சுமார் 5.81 லட்சம் பேர் எழுதினர். குரூப் 4 தேர்வை 15.88 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

2 மாதத்தில் நிறைவடையும் 2024 :

2024-ம் ஆண்டு முடிவடைய இன்னும் 2 மாதங்களே உள்ளன. இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்ற தேர்வு பணிகளை டிஎன்பிஎஸ்சி தீவிரப்படுத்தி உள்ளது. திட்டமிட்டப்படி 10 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை சரியான நேரத்தில் வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி, 2025-ம் ஆண்டுகான தேர்வு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

குரூப் 4 தேர்வர்களுக்கு வரும் முக்கிய அறிவிப்பு :

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை எழுதிய தேர்வர்களுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. 6,244 காலிப்பணியிடங்களில் இருந்து 8,932 வரை அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மாதம் மேலும் ஒரு முக்கிய அறிவிப்பாக குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு

அதே போன்று, குரூப் 2 தேர்வு எழுதியவர்களுக்கும் வரும் நாட்களில் மகிழ்ச்சிகரமான முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளில் 2,327 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 5.81 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இந்நிலையில், குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.

Nandri samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *