TNPSC-LOGO

குரூப் 4 தேர்வுக்கு ஏறத்தாழ லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதுகின்றோம். ஆனால் குரூப் 2 தேர்விற்கு அந்த அளவு ஆர்வம் காட்டுவதில்லை. எனவே பட்டப்படிப்பை முடித்தவர்கள் நிச்சயம் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

குரூப் 2 பிரிலிம்ஸ் தேர்வை பொருத்தவரை Scoring mark இல்லை, qualification mark ஆக இருக்கிறது. Qualification mark என்பது மெயின்ஸ் தேர்வு எழுதுவதற்கான qualifying mark ஆகும். தமிழைப் பொறுத்தவரை 95 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெறுவது ஒரு நல்ல மதிப்பெண் ஆக அமையும். கணிதம் பாடத்தை பொறுத்தவரை 25 கேள்விகள் கேட்கப்படும். அதில் 20 கேள்விகளுக்கு பதில் அளிப்பது அது நல்ல மதிப்பெண் ஆக அமையும்.

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. குரூப் 2 மட்டும் 2 ஏ தேர்விருக்கும் தயார் செய்யும் முறை குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. குரூப் 2 மட்டும் 2 ஏ தேர்விருக்கும் தயார் செய்யும் முறை குறித்து பார்க்கலாம்.

இது குறித்து மேலும் விளக்கம் அளிக்கிறார் சுரண்டை சாந்தியை அகாடமி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், “குரூப் 4 தேர்வில் இருந்து குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்விற்கு பெரிய வேறுபாடுகள் கிடையாது. குரூப் 4 தேர்வில் தயார் செய்வதில் இன்னும் கூடுதல் கவனம் காட்டினால் குரூப் 2 தேர்வு நிச்சயம் வெற்றி பெற முடியும்.”
தமிழ், பொது அறிவு, கணிதம், யூனிட் 8 மற்றும் யூனிட் 9 போன்ற பாடங்களையும் குரூப் 4 தேர்விற்கு தயார் செய்திருப்பீர்கள். அதிலிருந்து கூடுதல் கவனம் செலுத்தி படித்தால் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற முடியும்.

 பொது அறிவு கேள்விகள் 75 மதிப்பெண்கள் கேட்கப்படும். இதில் 50 கேள்விகளுக்கு பதில் அளித்தாலே ஒரு நல்ல மதிப்பெண் ஆக அமையும். மொத்தம் 165 மற்றும் அதற்கு மேலே மதிப்பெண் பெற்றால் எளிதில் நீங்கள் மெயின்ஸ் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பாக அமையும்.

மெயின்ஸ் தேர்வை பொறுத்தவரை 1: 10 விகிதத்தில் தேர்வு செய்வார்கள். கிட்டதட்ட 5000 நபர்கள் மெயின் தேர்விற்கு தோராயமாக தேர்வாகலாம்.இந்த ஆண்டு குரூப் 2 மெயின் descriptive தேர்விற்கு மூன்று இடங்களில் மட்டுமே தேர்வு நடைபெறும். சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

எனவே நீங்கள் 165 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் பொழுது குரூப் 2 மெயின்ஸ் objective மற்றும் descriptive என இரண்டு தேர்வையும் எழுதுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குரூப் 4 தேர்விற்கு தயார் செய்வதை காட்டிலும் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்விற்கு யூனிட் 8,9 மற்றும் current affairs பகுதியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டு நடப்புகளை பற்றியும் செய்தித்தாள் வாசித்தல் பழக்கத்தையும் அதிகப்படுத்துதலில் மூலம் கேள்விகளுக்கு எளிதில் பதிலளிக்க முடியும். மேலும் current affairs கேள்விகள் இதற்கு முன்பு ஒரு வரி கேள்விகளாக கேட்கப்படும் ஆனால் தற்போது அது வாழ்வியலோடு இணைந்து தீர்க்கப்படுவதால் தேர்வர்கள் சற்று இந்த பகுதியில் சிரமப்படுகின்றனர் .எனவே அதற்கு செய்தித்தாள் வாசித்தல் பழக்கத்தை அதிகப்படுத்துவதன் மூலம் இதை எளிதில் பதிலளிக்க முடியும்.

செய்தித்தாளில் தலையகம், editorial, பன்னாட்டு செய்திகள், மாநிலத்தில் முக்கிய நிகழ்வுகள், சர்வதேச விளையாட்டு போன்ற செய்திகளை படிப்பதன் மூலம் இந்த பகுதியில் கேட்கப்படும் கேள்விகளை எளிதில் பதிலளிக்க முடியும்.பொதுத்தமிழ் தேர்வு செய்தவர்களுக்கு 100 கேள்விகள் தமிழில் கேட்கப்படும். பொது அறிவு திருக்குறளில் இருந்து 10 யில் இருந்து 15 கேள்விகள் கேட்கப்படும். தமிழில் தேர்வு செய்யும் பொழுது நீங்கள் 110 கேள்விகள் எளிதில் பதிலளிக்க முடியும்.

பொதுத்தமிழ் கணிதத்தை தவிர்த்து குரூப் 4 தேர்விற்கு தயார் செய்த அதே பாடத்திட்டங்களை தான் தயார் செய்ய வேண்டும். Polity, economics, history, indian national movement போன்ற பகுதிகளில் படிக்க வேண்டும். மேலும் யூனிட் 8,9 மற்றும் current affairs பகுதிகளை தெளிவாக தயார் செய்யும் பொழுது 165 மதிப்பெண் எளிதில் பெற முடியும்.குரூப் 2 மெயின்ஸ் தேர்வு objective computer based test ஆகவும், குரூப் 2a மெயின் தேர்வு descriptive தேர்வாகவும் நடைபெறும். Descriptive தேர்விற்கு அதிகம் எழுதி தயார் செய்ய வேண்டும் என்றும் விளக்குகின்றார் ரமேஷ்.

நன்றி news18

விளம்பரம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *