SBI Recruitment 2024 : பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 1,497 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பெறப்படுகிறது. பி.இ/பி.டெக்/எம்.சி.ஏ/எம்.டெக்/எம்.எஸ்.சி ஆகிய பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
SBI Recruitment 2024 of Engineers : பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் (Specialist Cadre Officers) தொழில்நுட்ப பிரிவில் உள்ள 1,497 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் அக்டோபர் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
டெபியூட்டி மேனேஜர் (Systems) – Project Management & Delivery | 187 |
டெபியூட்டி மேனேஜர் (Systems) – Infra Support & Cloud Operations | 412 |
டெபியூட்டி மேனேஜர் (Systems) – Networking Operations | 80 |
டெபியூட்டி மேனேஜர் (Systems) – IT Architect | 27 |
டெபியூட்டி மேனேஜர் (Systems) – Information Security | 7 |
உதவி மேலாளர் (Systems) | 784 |
மொத்தம் | 1497 |
எஸ்பிஐ வங்கி தொழில்நுட்ப பிரிவு பணியிடங்களுக்கு 30.06.2024 தேதியின் படி, விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 25 வயதைக் கடந்திருக்க வேண்டும். மேலும் அதிகப்படியாக 35 வயது வரை இருக்கலாம். உதவி மேலாளர் பதவிக்கு மட்டும் 21 வயதைக் கடந்தவர்கள் முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
இப்பதவிகளுக்கு கணினி அறிவியல்/ கணினி அறிவியல் & பொறியியல்/ மென்பொருள் பொறியியல்/ தகவல் தொழில்நுட்பம்/ மின்னணுவியல்/ மின்னணுவியல் & தகவல் தொடர்புப் பொறியாளர் ஆகிய பொறியியல் பாடங்களில் B. Tech / B.E அல்லது அதற்கு நிகரான பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி/ MCA/M.Tech / M.Sc ஆகிய படிப்புகள் முடித்திருக்க வேண்டும். மேலும், இப்பணியிடங்களுக்கு குறைந்தது 4 ஆண்டுகள் அனுபவம் தேவை. உதவி மேலாளர் அனுபவம் அவசியமில்லை.
- எஸ்பிஐ வங்கி டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு ரூ. 64,820 முதல் ரூ.93,960 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
- உதவி மேலாளர் பதவிக்கு ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
- டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு விண்ணப்பதார்களில் இருந்து கல்வித்தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு கலந்துரையாடல் தேர்விற்கு அழைக்கப்படுவர். அதன் தொடர்ச்சியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
- உதவி மேலாளர் பதவிக்கு ஆன்லைன் தேர்வு, கலந்துரையாடல் ஆகிய அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள், ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி அடையும் பட்சம் கலந்துரையாடலுக்கு அனுமதிக்கப்படுவர். அதைத்தொடர்ந்து, இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
இப்பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் https://sbi.co.in/web/careers என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்கவும். தேவையான ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள் :
விவரம் | முக்கிய நாட்கள் |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 04.10.2024 |
ஆன்லைன் தேர்வு | பின்னர் அறிவிக்கப்படும் |
கலந்துரையாடல் | பின்னர் அறிவிக்கப்படும் |
இறுதி | பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் |
நன்றி samayam