TN Ration Shops Recruitment 2024 Online application : கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலை கடைகளில் உள்ள விற்பனையாளர் (Salesman) மற்றும் கட்டுநர் (Packer) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 38 மாவட்டங்களில் உள்ள 3,308 காலிப்பணியிடங்கள் தேர்வில்லாமல் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்கள் ஆன்லைன் வழியான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்நிலையில், இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மாவட்ட வாரியாக பெறப்படும் விண்ணப்பங்கள் :
38 மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களின் இணையத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். உதாரணத்திற்கு சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
38 மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களின் இணையத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். உதாரணத்திற்கு சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
படி 1 : சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் https://www.drbchn.in/ அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
படி 2 : முகப்பு பக்கத்திலேயே ஆன்லைன் விண்ணப்பத்திற்கான லிங்க் இடம்பெற்று இருக்கும்.
படி 3 : நீங்கள் விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பினால், “Salesmen Apply”என்று இருக்கும். அதனை கிளிக் செய்யவும். கட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் “Packers Apply” என்று இருக்கும் அதனை கிளிக் செய்யவும்.
படி 4 : முதலில் உங்களுடைய சுய விவரங்களை உள்ளிட வேண்டும். பெயர், பிறந்த நாள், தந்தை பெயர், பாலினம், திருமணம் விவரம், மாவட்டம், குடும்ப அட்டை எண் அல்லது வாக்காளர் அட்டை எண்ணை கொடுக்க வேண்டும்.
படி 5 : தொடர்ந்து, மாநிலம், தாய் மொழி, தேசியம் மற்றும் மதம் ஆகிய விவரத்தை பதிவு செய்யவும்.
படி 6 : சான்றிதழ் விவரங்கள் பிரிவில், எஸ்சி/எஸ்டி/பிசி/எம்பிசி உள்ளிட்ட எந்த பிரிவை சேர்ந்தவர் என்பதை கிளிக் செய்யவும். அடுத்து மாற்றுத் திறனாளியா, முன்னாள் ராணுவத்தினரா என்ற கேள்விக்கான பதிலை கிளிக் செய்யவும்.
படி 7 : 12.5 கேள்வியில், அரசு தேர்வுகளில் கலந்துகொள்ள உங்களுக்கு தடை உள்ளதா என்றும் கேட்கப்பட்டு இருக்கும். அதற்கான சரியான பதிலை கொடுக்கவும்.
படி 8 : 12.6 கேள்விக்கு நீங்கள் வேறு பணியில் இருப்பவர்கள் என்றால் ஆம் என்று கொடுக்கவும். வேலையில் இல்லை என்றால் இல்லை என்று கொடுக்கவும்.
படி 9 : 12.7 கேள்விக்கு அரசாணை எண் 122 கீழ் உரிமை கோருபவராக இருந்தால் மட்டும் ஆம் என்று கொடுக்கவும்.
படி 10 : அடுத்ததாக கல்வித்தகுதி குறித்த விவரங்களை அளிக்கவும். அதில் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் எண், பதிவு எண், பெற்ற மதிப்பெண்கள், தேர்ச்சி பெற்ற வருடம், மொத்த மதிப்பெண், பயிற்று மொழி, மதிப்பெண் சதவீதம், எந்த பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட வேண்டும்.
படி 11 : அதில் 12-ம் வகுப்பில் தமிழ் மொழியில் பயிற்றவரா என்ற கேள்வி இடம்பெற்று இருக்கும். அதற்கு தகுந்த பதிலை அளிக்கவும். அடுத்ததாக அடிப்படை கம்ப்யூட்டர் கல்வி குறித்த கேள்வி இருக்கும், கம்ப்யூட்டர் உபயோகப்படுத்த தெரியும் என்றால் ஆம் என்று கிளிக் செய்யவும்.
படி 12 : 14 கேள்வியில் தமிழ் வழி கல்வியில் படித்தற்கான ஒதுக்கீடு கோருபவரா என்று கேட்கப்பட்டு இருக்கும். நீங்கள் 1 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து இருந்தால், இதற்கு ஆம் என்று கொடுக்கவும்.
படி 13 : 15 கேள்விக்கு வீட்டு முகவரியை கொடுக்கவும்.
படி 14 : 16 மற்றும் 17வது கேள்விக்கு சரியான இமெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை கொடுக்கவும்.
படி 15 : 18 என்ற இடத்தில் உங்களுடைய புகைப்படம் மற்றும் 19 இடத்தில் காகிதத்தில் கையொப்பம் போட்டு எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றவும். இரண்டு படங்களும் 50kb குறைவாக இருக்க வேண்டும்.
படி 16 : இறுதியாக விற்பனையாளர் பதவி என்றால் 12-ம் வகுப்பு, கட்டுநர் பதவி என்றால் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை புகைப்படம் எடுத்து 200kb கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்.
படி 17 : 20வது இடத்தில் மஞ்சள் நிற கட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை டைப் செய்யவும்.
படி 18 : 21வது இடத்தில் உறுதி மொழி இருக்கும் அதனைப் படித்து பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தை கிளிக் செய்யவும். இறுதியாக “Submit” என்பதை கிளிக் செய்த உடன் உங்களுடைய விண்ணப்பம் முடிவடைந்துவிடும்.
படி 19 : இதனைத்தொடர்ந்து, விண்ணப்ப எண் தோன்றும், அதனைக் குறித்து வைத்துகொள்ளவும்.
படி 20 : பின்னர் விண்ணப்பக் கட்டணமாக விற்பனையாளர் (Salesman) பதவிக்கு ரூ.150 மற்றும் கட்டுநர் (Packer) பதவிக்கு ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
அந்தந்த மாவட்டத்திற்கு District Recruitment Bureau தொடர்ந்து அந்தந்த மாவட்ட பெயரை போட்டு இணையத்தில் தேடவும்.
தகுதிகள் மற்றும் சம்பள விவரம் :
ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டுநர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதார்களுக்கு தமிழ் மொழியில் பேசவும், எழுதப் படிக்கவும் போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
தகுதிகள் மற்றும் சம்பள விவரம் :
ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டுநர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதார்களுக்கு தமிழ் மொழியில் பேசவும், எழுதப் படிக்கவும் போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
நியாயவிலை கடை விற்பனையாளர் பதவிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.6,250 மாதம் வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.8,600 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும். நியாயவிலை கடை கட்டுநர் பதவிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.5,500 மாதம் வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.7,800 முதல் ரூ.26,000 வரை வழங்கப்படும்.
நன்றி samayam