PG Teacher Exam New Syllabus : தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் உட்பட சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு டிஆர்பி போட்டித் தேர்வு நடத்தி தகுதியானவர்களை நிரப்பி வருகிறது. இந்நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கான பாடத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

TRB PG Teacher Exam New Syllabus : தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் உட்பட கல்வி துறை சார்ந்த போட்டித் தேர்வுகளை டிஆர்பி நடத்தி வருகிறது. அந்தந்த தேர்விற்கான பாடத்திட்டத்தையும் டிஆர்பி வெளியிட்டு அதன்படி தேர்வை நடத்தி வருகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வின் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பாடத்திட்டம் :
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் 10 ஆண்டுகளாக எந்தவித மாற்றம் இல்லாமல் தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில், பள்ளி கல்வித் துறை முதுகலை பட்டதாரி ஆசிரியர் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடிவெடுத்தது. அதன்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (SCERT)சார்பில் புதிய பாடத்திட்டம் வடிவமைக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை- 1, கணினி பயிற்றுநர் நிலை- 1 மற்றும் பிற மொழிப்பாடங்களின் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த புதிய பாடத்திட்டத்திற்கு தமிழ்நாடு பொதுப்பள்ளி கல்வி வாரியம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, பள்ளிக் கல்வித்துறை செயலர் சோ.மதுமதி உத்தரவின்பேரில், புதிய பாடத்திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *