TN TRB Post Graduate Teacher Exam : தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் உட்பட சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு டிஆர்பி போட்டித் தேர்வு நடத்தி தகுதியானவர்களை நிரப்பி வருகிறது. இந்நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கான பாடத்திட்டம் மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த தேர்வு புதிய பாடத்திட்டத்தின் படி நடத்தப்படும் என தெரிகிறது.
TRB PG Teacher Exam Syllabus : தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் உட்பட கல்வி துறை சார்ந்த போட்டித் தேர்வுகளை டிஆர்பி நடத்தி வருகிறது. அந்தந்த தேர்விற்கான பாடத்திட்டத்தையும் டிஆர்பி வெளியிட்டு அதன்படி தேர்வை நடத்தி வருகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்ட கல்லூரிகள், ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தி வருகிறது.
இந்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணை படி, டிஆர்பி பல்வேறு முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு உட்பட 7 தேர்வுகளை நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் இடைநிலை ஆசிரியர் தேர்விற்கு பின்னர் எந்தவித தேர்விற்கும் அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில், கடந்த 10 வருடங்களாக மாற்றாமல் கடைபிடிக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வின் பாடத்திட்டத்தை டிஆர்பி மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பழைய பாடத்திட்டத்தின் படி, கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணை படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்விற்கான அறிவிப்பு கடந்த மே மாதமே வெளியாகி இதற்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கான அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை.
Nandri samayam