NTPC Recruitment 2024 Apply Online : மத்திய அரசின் மின் உற்பத்தி நிறுவனமான தேசிய அனல் மின் கழகத்தில் உள்ள டெபியூட்டி மேனேஜர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் இருக்கும் 250 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
NTPC Deputy Manager Recruitment 2024 :மத்திய அரசின் மின் உற்பத்தி நிறுவனமான தேசிய அனல் மின் கழகத்தில் (NTPC) உள்ள 250 டெபியூட்டி மேனேஜர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டெபியூட்டி மேனேஜர் பணியின் விவரங்கள் :
பதவியின் பிரிவு | காலிப்பணியிடம் |
எலெக்ட்ரிக்கல் எரிக்ஷன் | 45 |
மெக்கானிக்கல் எரிக்ஷன் | 95 |
C & I எரிக்ஷன் | 35 |
சிவில் கட்டுமானம் | 75 |
வயது வரம்பு :
தேசிய அனல் மின் கழகத்தில் உள்ள டெபியூட்டி மேனேஜர் காலிப்பணியிடங்களை விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் அதிகப்படியாக 40 வயதை கடந்திருக்கக் கூடாது. வயது வரம்பில் மத்திய அரசு விதியின் படி தளர்வு உண்டு.
கல்வித்தகுதி :
- எலெக்ட்ரிக்கல் எரிக்ஷன் பிரிவில் டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல்/ எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 ஆண்டுகள் அனுபவம் தேவை.
- மெக்கானிக்கல் எரிக்ஷன் பிரிவில் டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு மெக்கானிக்கல்/ ப்ரோடக்ஷன் பிரிவில் B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 ஆண்டுகள் அனுபவம் தேவை.
- C & I எரிக்ஷன் பிரிவில் டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல்/ கன்ரோல் & இன்ஸ்ரூமெண்டேசன்/ இன்ஸ்ரூமெண்டேசன் பிரிவில் B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 ஆண்டுகள் அனுபவம் தேவை.
- சிவில் கட்டுமானம் பிரிவில் டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு சிவில்/ கட்டுமானம் பிரிவில் B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 ஆண்டுகள் அனுபவம் தேவை.
சம்பள விவரம் :
தேசிய அனல் மின் கழகத்தில் உள்ள டெபியூட்டி மேனேஜர் E4 Grade அளவு பதவிக்கு குறைந்தபட்சம் ரூ.70,000 முதல் அதிகப்படியாக ரூ.2,00,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் அதிகரிக்கக்கும்பட்சத்தில் விண்ணப்பத்தார்களின் கல்வி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். போதிய விண்ணப்பங்கள் பெறப்படும்பட்சத்தில் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://careers.ntpc.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளம் வழியாக மட்டும் விண்ணப்பிக்கவும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். எஸ்சி/ எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
முக்கிய நாட்கள் :
விவரம் | முக்கிய நாட்கள் |
விண்ணப்பம் தொடங்கிய நாள் | 14.09.2024 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 28.09.2024 |
எழுத்துத் தேர்வு/ நேர்காணல் | பின்னர் அறிவிக்கப்படும் |
மத்திய அரசின் மின் உற்பத்தி நிறுவனமான தேசிய அனல் மின் கழகத்தில் (NTPC) உள்ள 250 டெபியூட்டி மேனேஜர் காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் உடனே ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
நன்றி samayam