recruitment

New India Assurance Company Recruitment 2024 : நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள நிர்வாக அதிகாரிகள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. கணக்கு மற்றும் பொது பதவி என மொத்தம் 170 காலிப்பணியிடங்கள் மூன்று கட்ட தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

New India Assurance Company Recruitment 2024 Apply Online : மத்திய அரசின் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் (The New India Assurance Company Ltd)நிறுவனத்தில் காலியாகவுள்ள 170 நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து 29.09.2024 அன்று வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரிகள் பதவியில் கணக்கு பிரிவு ( Accounts)-50, பொது பிரிவு (Generalists)-120 என மொத்தம்- 170 என்ற அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இதில் ஒபிசி பிரிவில் 45 இடங்கள், பொருளாதார பின்தங்கியவர்கள் பிரிவில் 17 இடங்கள், எஸ்சி பிரிவில் 25 இடங்கள், எஸ்சி பிரிவில் 12 இடங்கள், பொது பிரிவில் 71 இடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 13 என நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு :

நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களுக்கு 01.09.2024 அன்று படி, விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 21 வயதைக் கடந்திருக்க வேண்டும். அதே போன்று அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார் 2.09.1994 முன்பு பிறந்தவராகவும், 01.09.2003 பின்பு பிறந்தவராகவும் இருக்கக்கூடாது. வயது வரம்பில் எஸ்சி. எஸ்டி பிரிவினருக்கு கூடுதலாக 5 வருடங்களும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.

சம்பள விவரம் :

இப்பணியிடங்களுக்கு மூன்று கட்ட தேர்வில் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.50.925 முதல சம்பளமாக வழங்கப்படும். ரூ.50,925 முதல் தொடங்கி ரூ.96,765 மாதம் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் தோராயமாக ரூ.88,000 மாதம் வழங்கப்படும்.

கவ்லித்தகுதி :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 01.09.2024 தேதியின் படி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டத்தை 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கு பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் ICAI/செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் மற்றும் ஏதேனும் பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணியிடங்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்படும். முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கும் மற்றும் முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களும் நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்விற்கு தகுதியடைவர். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் https://www.newindia.co.in/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக்க கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள் :

இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள்29.09.2024. முதல்நிலைத் தேர்வு 13.10.2024 அன்றும், முதன்மைத் தேர்வு 17.11.2024 அன்றும் நடைபெறும்.

நன்றி samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *