சென்னை பல்கலைக்கழக தொலைத்தூரக் கல்வி தேர்வுகளுக்கான் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. தொலைத்தூரக் கல்வியில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 2024 ஜூன் பருவ தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைத்தூரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் கற்பிக்கப்படுகிறது. அதே போன்று, எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் பி.எட் ஆகிய படிப்புகளும் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், 2024 ஜூன் மாத தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைத்தூரக் கல்வி நிறுவனத்தின் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் பி.எட், டிப்ளமோ, சான்றிதழ், எம்.பி.ஏ, எம்.சி.ஏ ஆகிய படிப்புகளில் சேர்ந்து பயின்று வரும் மாணவர்கள் நேற்று (ஆகஸ்ட் 23) முதல் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஜூன் பருவ தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
படி 1: சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைத்தூரக் கல்வி நிறுவனத்தில் http://www.ideunom.ac.in/ என்ற இணையத்தளத்திற்கு செல்லவும்.
படி 2 : முகப்பு பக்கத்தில் Examination என்ற ஆப்ஷனில் கிளிக் செய்யவும்.
படி 3 : தொடர்ந்து, JUNE 2024 Exam என இருக்கும். என்ன பாடப்பிரிவு என்பதை கிளிக் செய்யவும்.
படி 4 : அதனைத்தொடர்ந்து, ஒரு பக்கம் திறக்கும், அதில் மாணவர்களின் தரவுகளை உள்ளிட்டு ஜூன் பருவ தேர்விற்கு விண்ணப்பிக்கவும்.
சென்னை பல்கலைக்கழக தொலைத்தூர கல்வி நிறுவனம் படிப்புகள் :
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைத்தூரக் கல்வி நிறுவனம் மூலம் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, சமூகவியல், பொது நிர்வாகம், குற்றவியல் மற்றும் காவல்துறை நிர்வாகம், வணிகம், கணிதம், உளவியல், புவியியல், கணினி பயன்பாடுகள் மற்றும் இசை ஆகிய 17 பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது.