LIC Housing Finance Recruitment 2024 : எல்.ஐ.சி-யில் ஹௌசிங் பைனான்ஸ் (Housing Finance Ltd)கீழ் உள்ள ஜூனியர் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 10 இடங்களும், புதுச்சேரியில் 1 இடங்களும், தெலுங்கானாவில் 31 இடங்களும், கர்நாடகாவில் 38 இடங்களும், ஆந்திர பிரதேசத்தில் 12 இடங்கள் என மொத்தம் 200 காலிப்பணியிடங்கள் இந்தியா முழுவதும் நிரப்பப்படவுள்ளது.
LIC பணியின் விவரங்கள் :
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
ஜூனியர் உதவியாளர் | 200 |
இப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
எல்.ஐ.சி-யில் உள்ள ஜூனியர் உதவியாளர் பணியிடங்களுக்கு 01.07.2024 ஆம் தேதியின் படி, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 02.07.1996 முதல் 01.07.2003 தேதி வரை பிறந்தவராக இருக்கலாம்.
சம்பள விவரம் :
எல்.ஐ.சி-யில் உள்ள ஜூனியர் உதவியாளர் பதவிக்கு அடிப்படையில் சம்பளம் ரூ.20,000 ஆகும். குறைந்தபட்சம் ரு.32,000 முதல் ரூ.35,200 வரை வழங்கப்படும். நகரத்திற்கு ஏற்று ஊதியம் மாறுப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
- இப்பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், கணினி இயற்றும் திறன் தேவை. கணினி சார்ந்த படிப்பில் டிகிரி, சான்றிதழ் படிப்பு அல்லது டிப்ளமோ பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு. அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
ஜூனியர் உதவியாளர் பதவிக்கு ஆன்லைன் வழியில் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்களில் பட்டியல் வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து, மருத்துவ பரிசோதனையில் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பதவிக்கு ஆர்வமுள்ளவர்கள் https://www.lichousing.com/job-opportunities என்ற இணையத்தளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும்.
முக்கிய நாட்கள் :
விவரம் | முக்கிய நாட்கள் |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 14.08.2024 |
ஆன்லைன் தேர்வு | செப்டம்பர் 2024 |
நேர்முகத் தேர்வு | பின்னர் அறிவிக்கப்படும் |
எல்.ஐ.சி-யில் ஹௌசிங் பைனான்ஸ் கீழ் உள்ள ஜூனியர் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் உடனே இமெயில் மற்றும் மொபைல் எண் கொண்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
நன்றி samayam