cricket3

மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் நான்கு ஐபிஎல் அணிகள் தங்கள் அணியின் கேப்டன்களை பதவி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு கேப்டன் ஏற்கனவே ஓய்வை அறிவித்து விட்டார். மற்ற மூன்று கேப்டன்களை நீக்குவது குறித்து அந்த அணி வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்து உள்ளது.

2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. அந்த ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் நான்கு அல்லது ஐந்து வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்பதால் அணியில் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால், இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாத மூன்று அணிகள் தங்கள் கேப்டன்களை மாற்ற உள்ளது.

அந்த அணிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணியும் தங்கள் அணியின் கேப்டனை மாற்றக் கூடும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ஃபாப் டூ பிளசிஸ் இருந்து வருகிறார். தற்போது 40 வயதாகும் நிலையில் அவரது பேட்டிங் செயல்பாட்டில் சரிவு ஏற்பட்டுள்ளது. அவரது வயதை கருத்தில் கொண்டு அவரை கேப்டன் பகுதியில் இருந்து அந்த அணி நீக்க உள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் கே எல் ராகுல் 2025 ஐபிஎல் தொடருக்கு முன் அந்த அணியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது. அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கே எல் ராகுலின் கேப்டன்சியில் அதிருப்தியுடன் இருப்பதால் அவர் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கே எல் ராகுலை வாங்க உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. அது வெற்றிகரமாக நடந்தால் கே எல் ராகுல் பெங்களூரு அணியின் கேப்டனாக இருப்பார். ஏலத்திற்கு முன்பே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கே எல் ராகுல் அணிமாற்றம் செய்யவும் வாய்ப்பு உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஷிகர் தவான் ஐபிஎல் தொடரிலிருந்தும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். எனவே, அவருக்கு பதிலாக வேறு ஒரு கேப்டனை அடையாளம் காண வேண்டிய நிலையில் உள்ளது அந்த அணி. இந்திய வீரர் ஒருவரை கேப்டனாக நியமிக்கும் முடிவில் உள்ளது பஞ்சாப் அணி. அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அணிக்குள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்க உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது அது வெற்றிகரமாக நடந்தால் கே எல் ராகுல் பெங்களூரு அணியின் கேப்டனாக இருப்பார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால், அவரது கேப்டன்சியை அணியில் இருக்கும் பலரும் விரும்பவில்லை. 2024 ஐபிஎல் தொடரில் அந்த அணியில் மிகப்பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது. 2024 ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றில் கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது. இதை அடுத்து இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக நியமிக்கக்கூடும் என தெரிகிறது.

நன்றி mykhel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *