சிஎஸ்கே ஸ்டார் வீரரை தட்டித்தூக்க மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில், எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து அனைத்து அணிகளும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில், ஒரு அணி 8 வீரர்கள் வரை தக்கவைக்க பிசிசிஐ அனுமதியளிக்க வேண்டும் என சிஎஸ்கே, கேகேஆர், சன் ரைசர்ஸ் போன்ற அணிகள் கோரிக்கை வைத்துள்ளன. இதுகுறித்து பரிசீலித்து, இம்மாத இறுதியில் பிசிசிஐ அறிவிக்க உள்ளது.
ஆனால், மெகா ஏலத்திற்குமுன், ஒரு அணி 4 வீரர்கள் மற்றும் ஒரு அன்கேப் வீரரையும் மட்டுமே தக்கவைக்க அனுமதி வழங்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இதற்கு ஏற்றார்போல், அனைத்து அணிகளும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டிவோன் கான்வே, மதீச பதிரனா போன்றவர்களை தக்கவைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், கூடுதலாக முஸ்தபிசுர் ரஹ்மானும் லைனில் இருக்கிறார். இதனால், ராசின் ரவீந்திராவை தக்கவைக்க வாய்ப்பு குறைவு எனக் கருதப்படுகிறது.
கடந்த சீசனில் ரவீந்திரா சிறப்பாக செயல்படவில்லை. 10 இன்னிங்ஸ்களில் களமிறங்கி, ஒரு சதம் உட்பட 220 ரன்களைதான் அடித்தார். அவரது சராசரி 22ஆகதான் இருந்தது. இதனால், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத இவரை வெளியேற்றதான், அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷனை மட்டுமல்ல ரோஹித் சர்மாவையும் தக்கவைக்க வாய்ப்பு குறைவு. இதனால், ஓபனர் இடத்திற்கு தரமான வீரரை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரவீந்திராவை, மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய தொகை கொடுத்து வாங்க தயாராக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஐபிஎல் 17ஆவது சீசனுக்குப் பிறகு ராசின் ரவீந்திராவின் ஆட்டம், அதிரடியாக இருக்கிறது. மேலும், பந்துவீச்சில் அவரது டி20 எகனாமி 6.24ஆக தான் உள்ளது. ஆகையால், ரவீந்திராவை வாங்க, கிட்டதட்ட அனைத்து அணிகளும் கடும் போட்டி போடும் எனக் கருதப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, டிவோன் கான்வே, பதிரனா, முஸ்தபிசுர் ரஹ்மான் போன்றவர்களில் 4 வீரர்களைதான் தக்கவைக்கும். 5 வருடங்களுக்கு மேல் இந்திய அணிக்கு ஆடவில்லை என்றால், அவர்களை அன்கேப் வீரர்கள் என பிசிசிஐ அறிவித்தால், தோனியையும் தக்கவைக்க வாய்ப்புள்ளது.