Indian Cricket Team, Top 5 Teams to Debut 100 players in T20 Cricket: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக எண்ணிக்கையிலான வீரர்களை களமிறக்கியதன் மூலம் பாகிஸ்தானின் சாதனையை முறியடித்துள்ளது.
Top 5 Teams to Debut 100 players in T20 Cricket: பாகிஸ்தானை பந்தாடுவதில் இந்தியாவை அடித்துக் கொள்ளவே முடியாது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா படைத்துள்ள ஏராளமான சாதனைகளில் முக்கியமான சாதனை ஒன்றும் சேர்ந்துள்ளது. ஆமாம், அதுவும் முதல் டி20 போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் மூலமாக இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க…14 வருடங்களுக்கு பிறகு குவாலியரில் புதிய மைதானத்தில் முதல் முறையாக சர்வதேச டி20 கிரிக்கெட் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா அதிவேக்மாக 100 ரன்களை குவித்து 12 ஓவர்களிலேயே வெற்றியை ருசி பார்த்தது. இந்த வெற்றியின் மூலமாக பாகிஸ்தானின் உலக சாதனையை முறியடித்து இந்தியா புதிய சரித்திரம் படைத்தது.
டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 6ஆம் தேதி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தப் போட்டியில் நிதிஷ் ரெட்டி மற்றும் மாயங்க் யாதவ் இருவரும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டனர். பின்னர் விளையாடிய இந்தியா 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாகத்தான் இந்தியா புதிய சரித்திரம் படைத்திருக்கிறது.
டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக எண்ணிக்கையிலான வீரர்களை களமிறக்குவதும் தனித்துவமானது. அதாவது, அதிக வீரர்களை அறிமுகம் செய்த பெருமையும், சாதனையும் இந்தியாவையே சேரும். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் பாகிஸ்தான் டி20 கிரிக்கெட்டில் 116 வீரர்களை அறிமுகம் செய்து வைத்து உலக சாதனையை படைத்திருந்தது. இந்த சாதனையைத் தான் இந்தியா முறியடித்து புதிய சரித்திரம் படைத்தது.
அதுவும், மாயங்க் யாதவ் மற்றும் நிதிஷ் ரெட்டியின் டி20 அறிமுகத்தின் மூலமாக இந்தியா இந்த சாதனையை முறியடித்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இந்தியா மொத்தமாக 117 வீரர்களை 236 டி20 போட்டிகளில் விளையாட அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வீரர்களை கொண்ட அணி என்ற உலக சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
இதுவரையில் இந்தியா 117 வீரர்களையும், பாகிஸ்தான் 116 வீரர்களையும், ஆஸ்திரேலியா 111 வீரர்களையும், இலங்கை 108 வீரர்களையும், இங்கிலாந்து 104 வீரர்களையும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் செய்து வைத்துள்ளன. இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் 100க்கும் அதிகமான வீரர்களை அறிமுகம் செய்து வைத்த டாப்-5 அணிகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான 2ஆவது டி20 போட்டி வரும் 9ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதே போன்று 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.