IND vs BAN – வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் – இந்திய அணியில் எந்த வீரர்களுக்கு வாய்ப்பு?
சென்னை : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வங்கதேச அணி வரும் செப்டம்பர் மாதம் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் பல சீனியர் வீரர்களும் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி செப்டம்பர் மாதம் முதல் வாரத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் எந்தந்த வீரர்கள் இந்த தொடரில் இடம் பெறலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக ஜெயிஸ்வால் ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெற உள்ளனர். மூன்றாவது வீரராக சுப்மன் கில்லும், நான்காவது வீரராக விராட் கோலியும் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. ஐந்தாவது வீரராக ஸ்ரேயாஸ் ஐயர், ஆறாவது வீரராக சர்பிராஸ்கான் இடம்பெறலாம். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட், ஏழாவது வீரராக இடம் பெறலாம். எட்டாவது வீரராக அஸ்வின் ஒன்பதாவது வீரராக ஜடேஜா பத்தாவது வீரராக முகமது சமி 11-வது வீரராக பும்ரா ஆகியோர் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்று கூடுதல் வீரராக இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல் இடம்பெறக்கூடும். 13 ஆம் வீரராக கூடுதல் சுழற் பந்துவீச்சாளர் குல்திப் யாதவ் விளையாடக்கூடும். 14 வது வீரராக முகமது சிராஜ், 15 வது வீரராக அபிமன்யு ஈஸ்வரன் அல்லது கே எல் ராகுல் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. இதில் சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானே இடம்பெற வாய்ப்பில்லை என தெரிகிறது. இந்த நிலையில் இந்திய அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரின் அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்கு கைகொடுக்கும். இதனால் இந்த இரண்டு வீரர்களையும் வங்கதேச தொடரிலிருந்து அணியில் சேர்த்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆனால் அடுத்த தலைமுறை வீரர்களான சர்பராஸ் கான் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்ற முடிவில் கம்பீர் இருக்கலாம். இதேபோன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ரிஷப் பண்ட் டெஸ்ட் அணிக்கு திரும்புவதால் இது அவருக்கு நல்ல பயிற்சியாக அமையும்.
நன்றி mykhel