மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி 6 இன்னிங்ஸில் 93 ரன்கள் ரோகித் சர்மா 6 இன்னிங்ஸில் 91 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்கள்.

இந்த சூழலில் இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக கருதப்படுகிறது. தற்போது இந்திய அணியில் பல இளம் வீரர்கள் இருப்பதால் கம்பீர் அபிஷேக் நாயர் போன்றவர்கள் எப்படி பயிற்சி தரப் போகிறார்கள் என்று கவாஸ்கர் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி ராமன் பிசிசிஐக்கு ஒரு கோரிக்கை விடுத்திருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் சச்சின் டெண்டுல்கரை பேட்டிங் ஆலோசகராக பி சி சி ஐ அனுப்ப வேண்டும்.சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் நிச்சயாமாக இந்திய வீரர்கள் பயன்பெறுவார்கள். முதல் டெஸ்ட் போட்டிக்கு தற்போது நீண்ட காலம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் முதல் மற்றும் இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கு இடையேயும் பத்து நாட்கள் இருக்கின்றது. இதனால் சச்சின் போன்ற ஆலோசகர்களை வெளிநாட்டு தொடருக்கு நியமிப்பது தற்போது அனைத்து அணிகளும் செய்யும் ஒரு விஷயம் தான். இந்த யோசனையை பிசிசிஐ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

டபிள்யு வி ராமனின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். சச்சின், லக்ஷ்மன் போன்ற வீரர்கள் பேட்டிங் ஆலோசகராக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி இருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிக் கொன்ற தொடரில் விராட் கோலி மொத்தமாகவே 134 ரன்கள் தான் அடித்து இருந்தார்.

அதன் பிறகு இந்தியா வந்தவுடன் மும்பையில் சச்சினை சந்தித்து கோலி, பயிற்சி பெற்றார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட் கோலி சதம் சதமாக அடித்து இருந்தார். இதனால் சச்சின், லக்ஷ்மன் போன்ற வீரர்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்தால் அது இந்திய அணிக்கு நன்மையை கொடுக்கும் விஷயமாக இருக்கும்.

Nandri mykhel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *