job

Central Leather Research Institute Recruitment 2024 : சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த காலிப்பனியிட்ங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 28 வயதை கடந்திருக்கக்கூடாது மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது மற்றும் தேர்வு செய்யப்படும் முறை ஆகியவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

CSIR – Central Leather Research Institute Recruitment 2024 : அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) கீழ் சென்னையில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள இளநிலை செயலக உதவியாளர் பதவியை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

சம்பள விவரம் :
இளநிலை செயலக உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். இப்பதவிக்கு தோராயமாக மாதம் ரூ.38,483 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

இப்பதவிக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 2 தாள்கள் கொண்டு எழுத்துத் தேர்வும், டைபிங் வேகத்திற்கான திறன் தேர்வும் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.clri.org/careers.aspx என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

முக்கிய நாட்கள் :
விவரம்முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்01.12.2024
தேர்வுபின்னர் அறிவிக்கப்படும்
மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்படும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் மேல் குறிப்பிட்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பப்பிக்கலாம். தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த வாய்ப்பு சிறப்பாக இருக்கும். தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தி முறையில் நடைபெறும்.

 

PM Internship Scheme 2024 Registration : 2024-25 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தில் மாணவர்களுக்கு பணிவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் முன்னணி நிறுவனங்களில் உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிரதமர் பயிற்சி திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் வரும் டிசம்பரில் முன்னணி நிறுவனங்களில் சுமார் 1.25 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் மூலம் தொழிற்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

பிரதமர் தொழிற்பயிற்சி திட்டம் 2024 :
இந்தியாவில் இளைஞர்களை வேலைக்கான திறன் மற்றும் சூழலுக்கு தயார் செய்யும் வகையில், நிறுவனங்களில் பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமீப காலமாக திறன்மிகு ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளது. தொழிற்பயிற்சி என்பது முதன்முதலில் பணிக்கு சேருபவர்களுக்கு ஒரு அலுவலக பணி, தொழில்நுட்பம் குறித்த புரிதலை ஏற்படுத்தி, தனக்கான எதிர்கால பணி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள உதவுகிறது. தொழிற்பயிற்சி காலத்தில் துறை சார்ந்த திறன்களை ஒருவர் மேம்படுத்திக் கொள்ள முடியும். இதை நோக்கமாக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் பிரதமர் தொழிற்பயிற்சி திட்டம். 5 வருடங்களில் முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தாண்டு 1.25 லட்சம் மாணவர்களுக்கு நிறுவனங்களில் பயிற்சி அளிக்கும் வண்ணம் பிரதமர் பயிற்சி திட்டம் 2024 தொடங்கப்பட்டுள்ளது.

முன்னணி நிறுவனங்களில் தொழிற்பயிற்சி :
மஹிந்திரா & மஹிந்திரா, மேக்ஸ் லைஃப், அலெம்பிக் பார்மா, டிசிஎஸ் உள்ளிட்ட 500 முன்னணி நிறுவனங்களில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இதனால், நிறுவனங்களில் நேரடி செயல்பாடுகள் மற்றும் பணி அனுபவத்தை மாணவர்கள் பெறமுடியும். வேலைக்கு தேவையான திறன்களை பயிற்சி காலத்தில் மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :
  • இத்திட்டம் மூலம் முன்னணி நிறுவனங்களில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாணவர்களின் வயது 21 முதல் 24 வரை இருக்க வேண்டும்.
  • பள்ளி படிப்பை முடித்தவர்கள், ஐடிஐ படித்தவர்கள், பாலிடெக்னிக், டிப்ளமோ, இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • முழு நேர ஊழியராக இருக்கக் கூடாது. அரசு ஊழியர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. அதே போன்று, IITs, IIMs, தேசிய சட்ட பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயரிய கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. CA/CMA முடித்தவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக் கூடாது.
மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை :
பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகையாக ரூ.5000 மாதம் வழங்கப்படும். இதில் ரூ.4,500 அரசு தரப்பில் இருந்து, ரூ.500 நிறுவனம் மூலமாகவும் அளிக்கப்படும். கூடுதலாக ரூ.6,000 ஒரு முறை மட்டும் அளிக்கப்படும்.

பயிற்சி காலம் மற்றும் சான்றிதழ் :

தேர்வு செய்யப்படும் நிறுவனங்களில் 12 மாதங்கள் அதாவது 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும். இதில் குறைந்தது 6 மாதங்கள் நேரடி பணி அனுபவம் பெறும் படி பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் தங்களுக்கான பணி திறன்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். பயிற்சி காலம் முடிந்த பின்னர் இதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

PM Internship Scheme 2024 : விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ளவர்கள் http://www.pminternship.mca.gov.in/ என்ற இணைய முகவரியில் அக்டோபர் 12-ம் தேதி முதல் பதிவு தொடங்கியது. தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களை தேர்வு செய்து பயிற்சிக்கு விண்ணப்பங்களை அனுப்பி நவம்பர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

 

Nandri samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *