இந்தியாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் மஹாராஷ்டிராவில் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சஹாஜா, சக வீராங்கனை ஈஸ்வரியை எதிர்கொண்டார். 52 நிமிடம் மட்டும் நடந்த இப்போட்டியில் சஹாஜா, 6-0, 6-0 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி, 6-0, 6-1 என சக வீராங்கனை மாதுரிமாவை வீழ்த்தினார்.

பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆகான்ஷா, சோகா ஜோடி, சுலோவேனியாவின் விக்டோரியா, லாட்வியாவின் டயானா ஜோடியை சந்தித்தது. ஒரு மணி நேரம், 6 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6-0, 0-6, 10-7 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

Nandri dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *