மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி தகுதி பெற வேண்டுமென்றால், இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற வேண்டும். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்த சூழலில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எந்த மாதிரியான பிளேயிங் லெவன் இருக்க வேண்டும் என பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளது. ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்க வேண்டுமா இல்லை நடுவரிசையில் இருக்க வேண்டுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்த ஜோடி தான் பெர்த் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றியைத் தேடித் தந்தது.
இதனால் இந்த ஜோடியை இந்திய அணி நிர்வாகம் மாற்றாது என நான் நினைக்கின்றேன். கவாஸ்கர், ரவி சாஸ்திர ஆகியோர் ரோகித் சர்மா நடுவரிசை வீரராக களம் இறங்காமல் தொடக்க வீரராக வரவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ரோகித் சர்மா தற்போது ஃபார்மில் இல்லை.பார்மில் இல்லாத ஒரு வீரர் ஏன் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும். இதேபோன்று பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அஸ்வின் இடம்பெற வேண்டும் என நினைக்கிறேன்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு பந்து வீச அதிக வாய்ப்பு தரப்படவில்லை. இதனால் அவர் ஸ்பெஷலாக எதையும் செய்யவில்லை. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீசி இரண்டு விக்கெட் வீழ்த்தினார். பேட்டிங்களும் அஸ்வினை விட வாஷிங்டன் சுந்தர் கொஞ்சம் நன்றாக விளையாடுவார். இதேபோன்று வேகப்பந்து வீச்சில் ஹர்ஷித் ராணாவை நீக்கிவிட்டு பிரசித் கிருஷ்ணாவை சேர்க்க வேண்டும் என நினைக்கின்றேன்.
பிரசித் கிருஷ்ணா நன்றாக உயரமாக இருப்பதால் அவர் ஆடுகளத்திலிருந்து பந்தை நன்றாக பவுண்ஸ் செய்ய முடியும். இது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஹர்பஜன்சிங் கூறி இருக்கிறார். இந்த நிலையில் அஸ்வினை ஹர்பஜன் சிங் மாற்ற வேண்டும் என்று கூறி இருப்பதை தமிழக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள். அஸ்வின் மீது உள்ள கோபத்தில் இவ்வாறு ஒரு மாற்றத்தை கூறுகிறீர்களா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Nandri mykhel