school

RTE Admission 2025 : நலிவடைந்த மற்றும் பின்தங்கிய சமுகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு கட்டாய கல்வி அளிக்கும் விதமாக கட்டாய கல்வி உரிமை சட்டம் (RTE Act) கொண்டு வரப்பட்டது. இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் எல்.கே.ஜி முதல் 1ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் இலவச கல்வி வழங்கப்படுகிறது. 2025 – 26 கல்வி ஆண்டில் உங்கள் குழந்தைகளை இத்திட்டத்தின் சேர்க்கை பெறுவது எப்படி மற்றும் அதற்கான தகுதிகள் என்ன பற்றி பார்க்கலாம்.

RTE Admission 2025 Eligibility : அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையின் அடிப்படையில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 1ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி அளிக்கப்படுகிறது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் இலவச கல்வி பெறுவது எப்படி? அதற்கான தகுதிகள் என்ன? மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை பற்றி பார்க்கலாம்.

நலிவடைந்த மற்றும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கட்டாய ஆரம்ப கல்வி வழங்குவது என்ற அடிப்படையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் இலவச கல்வியாக மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இத்திட்டம் மூலம் லட்சக்கணக்கில் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். 2023ஆம் ஆண்டு வரை சுமார் 4.60 லட்சம் மாணவர்கள் இத்திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சம் இடங்கள்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்க்கீழ் தமிழ்நாட்டில் 8,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு சேர்க்கை நடைபெறுகிறது. ஆர்டிஇ திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 1ஆம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இந்த சட்டத்தின் கீழ் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு 8ஆம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும்.

ஆர்டிஇ சட்டத்தின் பள்ளிகளில் சேர தகுதிகள் என்ன?

  • இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு சில குறிப்பிட்ட தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

  • அதில் முதல் கட்டமாக நீங்கள் ஆர்டிஇ மூலம் சேர்க்க விரும்பும் பள்ளி மாணவரின் வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும்.

  • குழந்தையின் வயது 6 முதல் 14 வரை இருக்க வேண்டும்.

  • குழந்தையின் பெற்றோர் வருமானம் ரூ. 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

  • சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு.

  • எல்.கே.ஜி சேரும் குழந்தையின் வயது 3 வயது துவங்கியும் 4 வயது முடியாமலும் இருக்க வேண்டும்.

  • பெற்றோர் மாற்றுத்திறனாளிகள், ஒரு பெற்றோர் உள்ள குழந்தைகள் எனில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இலவச கல்வியில் வழங்கப்படும் சலுகைகள் என்ன?

ஆர்டிஇ சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையில் சேரும் குழந்தைகளுக்கு சேர்க்கை முதல் 8ஆம் வகுப்பு வரை கல்வி கட்டணம் இலவசம். புத்தகம், சீருடை உள்ளிட்ட கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்த வேண்டும்.

இலவச கல்விக்கு விண்ணப்பிக்கும் முறையும், தேர்வு முறையும்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ், தனியார் பள்ளியில் சேர்க்கை பெற விரும்புகிறவர்கள் அதற்கான அரசு வெளியிடும் இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தங்களின் வீட்டு பகுதியில் உள்ள 5 பள்ளிகள் வரை இதில் தேர்வு செய்யலாம். நீங்கள் விண்ணப்பிக்கும் பள்ளிகளில் RTE கீழ் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் பெறும்பட்சத்தில், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *