மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே பைனலுக்கு முன்னேறும். இந்த சூழலில் முதல் டெஸ்டில் வெற்றிக்கு பிறகு இந்திய அணி முதல் இடத்திலும், தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் இலங்கை நான்காவது இடத்திலும் இருந்தது. இந்த சூழலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. முதலிடத்தில் இருந்த இந்திய அணி மூன்றாம் இடத்திற்கு சரிந்தது.
மூன்றாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் இருந்தது. இந்த சூழலில் இந்தியாவுக்கு தற்போது பிரச்சனை கொடுக்கும் அணியாக தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இருந்தன. இந்த நிலையில் தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணி எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கெபேர்ஹா நகரில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் அது இந்தியாவுக்கு பெரும் சாதகமாக அமையும். ஏனென்றால் தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றி வாய்ப்பு வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும். இந்த சூழலில் கடைசி ஆட்டத்தில் இலங்கை அணி கைவசம் ஐந்து விக்கெட்டுகள் இருக்க, மேலும் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்று விடலாம் என்ற நிலையில் இருந்தது.
இதனால் இந்திய ரசிகர்கள் அனைவரும் இலங்கை வெற்றி பெற வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் கேசவ் மகாராஜ் அபாரமாக பந்து வீசி இலங்கை அணியின் எஞ்சிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார். இதன் மூலம் இலங்கை அணி கடைசி இன்னிங்ஸில் 238 ரன்களில் ஆட்டம் இழந்து 109 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா அணி தற்போது 63.3 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா 60.71 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்திய அணி தற்போது 57.29 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், இலங்கை அணி 45 புள்ளி 45 என்ற வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்தில் இருக்கிறது.
தற்போது இலங்கை அணி பைனலுக்கு செல்லும் வாய்ப்பு வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தருணத்தில் தென் ஆப்பிரிக்கா இன்னும் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரண்டிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், அது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக அமையும். ஒருவேளை தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால் அவர்கள் முதலிடத்தை பிடித்து பைனலுக்கு தகுதி பெற்றுவிடுவார்கள். இதனால் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான எஞ்சிய டெஸ்டில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். இந்த சூழலில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது. இதில் இரண்டிலும் அந்த அணி தோல்வியை தழுவினால் அதுவும் இந்தியாவுக்கு சாதகமாக அமையும். இதனால் ஃபைனலில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதப் போகிறதா? இல்லை தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா மோதப் போகிறதா? இல்லை இந்தியா தென்னாபிரிக்காவுடன் மோதப் போகிறதா? என்றுதான் கேள்வியாக இருக்கிறது.
Nandri mykhel