UGC – UG Biannual Admission Changes : தேசிய கல்வி கொள்கை 2020 அடிப்படையில், இளங்கலை படிப்புகளில் யுஜிசி புதிய மாற்றங்களை கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைபடி, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும். மேலும், 12-ம் வகுப்பில் எந்த பிரிவில் படித்திருந்தாலும், உயர்கல்வியை விரும்பிய துறையில் தேர்வு செய்யலாம். நுழைவு தேர்வின் மூலம் மாணவர்கள் விரும்பும் இளங்கலை, முதுகலை படிப்புகளில் சேரலாம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UGC UG/PG Courses Major Changes : தேசிய கல்வி கொள்கையின்படி, உயர்கல்வியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் யுஜிசி, உயர்கல்வியில் சேர்க்கையிலும், மாணவர்களுக்கான பாட தேர்விலும் அதிரடியாக சில மாற்றங்களை வரையறுத்துள்ளது. இதற்கான வரைவு அறிக்கை வெளியாகியுள்ளது. யுஜிசி-யின் வரைவு அறிக்கையின் முக்கிய அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர்கள் சேர்க்கை

புதிய முறைப்படி, உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும். அதாவது, ஜூலை/ ஆகஸ்ட் மாதத்தில் ஒரு முறையும், ஜனவரி/ பிப்ரவரி மாதத்தில் ஒரு முறையும் என இரண்டு முறை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இதனால் மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டு வரை காத்திருக்காமல் தாங்கள் விரும்பிய பாடங்களை தேர்வு செய்து இடையில் மாறிக்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.

எந்த துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்
12-ம் வகுப்பில் எந்த பாடத்தை தேர்வு செய்து படித்திருந்தாலும், உயர்கல்வியில் விரும்பும் பாடத்துறையை தேர்வு செய்து படிக்கலாம். அதாவது, மாணவர்கள் படிக்க விரும்பும் பாடத்திற்கு பொதுவாக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு அல்லது பல்கலைக்கழக அளவிலான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும்பட்சத்தில், மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தை படிக்க முடியும். இந்த அம்சம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நெகிழ்வான வருகை பதிவு

புதிய பாடமுறையின்படி, உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் வருகை பதிவு கொள்கைகளை தன்னிச்சையாக வரைவுப்படுத்தி கொள்ளலாம்.

பட்டத்தை பெறுவதற்கு கிரெடிட் தேவை

இளங்கலை பட்டத்தை ஒரு மாணவர் பெறுவதற்கு அந்த முதன்மை பாடத்திற்கு ஒதுக்கப்பட்ட கிரெடிட்டில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பெற்று இருக்க வேண்டும். இதர கிரெடிட்-களை மற்ற திறன் சார்ந்த படிப்புகள், தொழிற்பயிற்சி அல்லது வேறு துறை பாடத்திற்கான படிப்பில் பெறலாம். இதன் மூலம் மாணவர்கள் ஒரு துறை சார்ந்த படிப்பு என்று மட்டுமில்லாமல், வெவ்வேறு பாடங்களில் பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளலாமல், ஒரு பட்டப்படிபிற்கான கல்வி ஆண்டிலேயே திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

1 ஆண்டிற்கு முன்னரே பட்டப்படிப்பை முடிக்கலாம்

இளங்கலை பட்டப்படிப்பை மாணவர்கள் விரும்பினால் ஒரு ஆண்டிற்கு முன்னரே முடிக்க முடியும். அதே போன்று, மாணவர்கள் விரும்பினால் கூடுதலாக 1 ஆண்டு வரை படிப்பில் கால அளவை உயர்த்திக்கொள்ளலாம்.

நாடு முழுவதும் அமல்படுத்த யுஜிசி திட்டம்
தேசிய கல்வி கொள்கை 2020-யின் அடிப்படையில் வரைவு செய்யப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறை நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பின்பற்ற வேண்டும். தற்கால வளர்ச்சிக்கு ஏற்று மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும் மற்றும் பல்துறை அறிவை பெறும் வகையில் இந்த புதிய நடைமுறை வரையறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரைவிற்கு பொது மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர் என அனைவரும் கருத்து தெரிவிக்கும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Nandri samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *