Suthanthiramalar
கலிபோர்னியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் லட்சக்கணக்கான மக்கள் பீதி அடைந்தனர். வடக்கு கலிபோர்னியாவின் ஃபெர்ன்டேல் நகரில் (FERNDALE) இந்திய நேரப்படி நள்ளிரவு 1.40 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 7ஆக பதிவானதால், கடலோர பகுதிகளுக்கு அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. சுமார் 47 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒரே சமயத்தில் அறிவிப்பு வெளியானதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
Nandri Thanthi TV