பெங்களூரு அணி அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட்டை ரூ.12.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இரண்டு நாட்களாக நடந்து முடிந்தது. மொத்தம் 577 வீரர்கள் இந்த ஏலத்திற்காகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் அணிகளுக்குத் தேவையான வீரர்களை எடுத்துள்ளனர்.

ரூ.120 கோடி வரை மதிப்புள்ள வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரூ.37 கோடியில் விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களைத் தக்கவைத்து ரூ.83 கோடியோடு ஏலத்தில் பங்கேற்றது.

பெங்களூரு அணி அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட்டை ரூ.12.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

பெங்களூரு அணி வீரர்கள்:

விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள், லியாம் லிவிங்ஸ்டன், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் தார், சுயாஷ் சர்மா, க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், துஷார், பண்டேஜ், பெத்தேல், தேவதத் படிக்கல், சிகர்தா, என்கிடி லுங்கி, அபிநந்தன் சிங், மோஹித் ரத்தே

பெங்களூரு அணியின் உத்தேச பிளேயிங் 11:

பில் சால்ட், விராட் கோலி (கே), ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டன், க்ருனால் பாண்டியா, ஜிதேஷ் சர்மா (வி.கீ), டிம் டேவிட், புவனேஷ்வர் குமார், ரசிக் தார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்

Nandri news18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *