Reliance Jio: ரிலையன்ஸ் ஜியோ திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் இணைய பயனர்களுக்காக ஒரு சிறந்த ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • இணைய வசதி இல்லை என்றால், நமது அனைத்து வேலையும் ஸ்தபித்து விடும் நிலை உள்ளது.
  • தினசரி டேட்டா வரம்பு தீர்ந்து போகும் சமயத்தில், டேட்டா திட்டங்கள் கை கொடுக்கும்.
  • சில சமயங்களில் தினசரி டேட்டா வரம்பு தீர்ந்து போய், நமக்கு சிக்கல்களை உண்டாக்கலாம்.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். இந்த நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக புதிய ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கான முக்கிய தேவைகளில் ஒன்று டேட்டா. இணைய வசதி என்னும் டேட்டா இல்லை என்றால், நமது அனைத்து வேலையும் ஸ்தபித்து விடும் நிலை உள்ளது. அந்த அளவிற்கு நமது பணிகள் அனைத்தும் இணையத்தை சார்ந்து உள்ளன. சில சமயங்களில் தினசரி டேட்டா வரம்பு தீர்ந்து போய், நமக்கு சிக்கல்களை உண்டாக்கலாம். அத்தகைய சமயத்தில், டேட்டா ஒன்லி அல்லது பூஸ்டர் போக்குகள் போன்ற டேட்டா திட்டங்கள் கை கொடுக்கும். 

திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் இணைய பயனர்களுக்காக,ரிலையன்ஸ் ஜியோ ஒரு சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், 10 ஜிபி டேட்டா வெறும் 11 ரூபாய்க்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் 4G டேட்டா கிடைக்கும். ஜியோ (Relainace Jio) அறிமுகப்படுத்திய புதிய திட்டத்தை உங்கள் வழக்கமான திட்டத்துடன் சேர்த்து பயன்படுத்தலாம். தினசரி வரம்பு தரவு தீர்ந்துவிட்டால், பயனர்கள் இந்த பேக்கைப் பயன்படுத்தலாம்.

திரைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு அல்லது அதிக அளவிலான ஜிபி கொண்ட கோப்புகள், வீடியோக்கள் புகைப்படங்கள் உள்ளிட்ட தரவுகளை பதிவிறக்கம் செய்பவர்களுக்கு இந்த பேக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், ஜியோவின் இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 1 மணிநேரம் மட்டுமே. நீங்கள் ஒரு பெரிய கோப்பை பதிவிறக்கம் செய்கிறீர்கள் அல்லது ஒரு திரைப்படத்தை பதிவிறக்கம் செய்கிறீர்கள் என்றால், இந்த பேக் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 1 ஜிபி டேட்டாவுக்கு 12 முதல் 15 ரூபாய் கொடுக்க வேண்டும் என்பதால், 11 ரூபாய்க்கு 10 ஜிபி கிடைத்தால், அது நிச்சயம் நஷ்டம் அல்ல.

இந்த திட்டத்தின் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இதை ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்கள் இருவரும் பயன்படுத்தலாம். போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு ரூ.11க்கு 10 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை MyJio ஆப் அல்லது ஜியோ இணையதளத்தில் இருந்து ரீசார்ஜ் செய்யலாம். இந்த பேக்கின் சிறப்பு என்னவென்றால், பேஸ் பேக் திட்டத்துடன் அல்லது இல்லாமலும் பயன்படுத்தலாம்.

ஜியோ வழங்கும் பிற டேட்டா வவுச்சர்கள் மற்றும் பூஸ்டர் பேக்குகள்

₹49 திட்டம்: வரம்பற்ற 4ஜி டேட்டா, ஒரு நாள் வேலிடிட்டி கொண்டது.
₹175 திட்டம்: 10ஜிபி டேட்டா மற்றும் 10 OTT செயலிகளுக்கான அணுகல், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
₹219 திட்டம்: 30 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
₹359 திட்டம்: 50ஜிபி டேட்டா, நாட்கள் வேலிடிட்டி கொண்டது.

Nandri zeenews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *