சென்னை : ஐபிஎல் மெகா ஏலம் வரும் 24ஆம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெறுகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மெகா ஏலத்திற்கு ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த சூழலில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து ஐபிஎல் மெகா ஏலம் போல் ஒரு மாதிரி ஏலத்தை நடத்தி எந்த அணி எந்த வீரர்களை வாங்கும் என்பதை அறிவித்திருக்கிறார்கள்.
அதன்படி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் அவருடைய மகன் அனிருத் ஸ்ரீகாந்த் ஆகியோர் சென்னையில் மாதிரி ஏலம் ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். இதில் முரளி விஜய், யோ மகேஷ், சையது முகமது, வித்யூட் உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொரு அணி சார்பாக பங்கேற்றார்கள்.
இதில் பண்ட் பெயர் வந்தவுடன் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு அவரை வாங்க முயற்சி செய்தார்கள். இந்த ஏலத்தில் அதிக பணம் வைத்திருக்கக்கூடிய பஞ்சாப் அணி பண்டை 29 கோடி ரூபாய் கொடுத்து மாதிரி ஏலத்தில் எடுத்தது. இதேபோன்று இதற்கு அடுத்தபடியாக கேஎல் ராகுலை ஆர் சி பி அணி மாதிரி இடத்தில் 20 கோடி ரூபாய் கொடுத்து எடுத்திருக்கிறது. பெருந்தொகைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரை டெல்லி அணி 16 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அஸ்வினை 8 புள்ளி 5 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இதேபோன்று முன்னாள் தொடக்க வீரரான டுபிளசிசை 6 கோடி ரூபாயும், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு 10.5 கோடி கொடுத்து சிஎஸ்கே அணி எடுத்திருக்கிறது.
இதேபோன்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆன முகமது சமியை 11 கோடி ரூபாய் கொடுத்தும், அதிரடி விக்கெட் கீப்பர் இசான் கிஷனை 17 கோடி ரூபாய்க்கும் குஜராத் அணி மாதிரி ஏலத்தில் எடுத்திருக்கிறது. ஐதராபாத் அணி டேவிட் மில்லரை 8 கோடி ரூபாய்க்கும், கொல்கத்தா அணி ஜாஸ் பட்லரை 15 புள்ளி 5 கோடி ரூபாய்க்கும் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்கை 14.5 கோடி ரூபாய்க்கும் கே கே ஆர் மாதிரி ஏலத்தில் எடுத்திருக்கிறது.
இதேபோன்று ஆர்சிபி அணி டேவிட் வார்னரை 10 கோடி ரூபாய்க்கும் சாகலை 15.5 கோடி ரூபாய்க்கும் எடுத்துள்ளது. லக்னோ அணி மிச்சல் மார்சை 7.5 கோடி ரூபாய்க்கும், மார்க்கஸ் ஸ்டோனிசை 14 கோடி ரூபாய்க்கும், குயிண்டன் டி காக்கை 7.5 கோடி ரூபாய்க்கும் 14 கோடி ரூபாய்க்கும் லக்னோ ஏலத்தில் எடுத்துள்ளது. இதே போல் அஸ்வின் தனது குழுவுடன் ஒரு மாதிரி ஏலத்தை நடத்திருக்கிறார். அதன் முடிவுகள் நாளை வெளிவரும்.
Nandri mykhel