கங்குவா படம் நவம்பர் 14ஆம் தேதி உலகமெங்கும் 38 மொழிகளில் வெளிவர இருக்கிறது. திடீரென இந்த படம் ரிலீஸ் ஆகுமா என்பதில் ஒரு பெரிய கேள்விக்குறியே எழுந்துள்ளது. ஏற்கனவே தியேட்டர்களில்  அமரன் படம் வசூலில் சக்க போடு போட்டு வருகிறது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் இந்த படத்தின் ரிலீஸ் செய்யும் உரிமையை வாங்கியுள்ளது.

அமரன் படத்தை போலவே கங்குவா படத்தையும் அவர்கள் தான் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்கின்றனர். ஆரம்பத்தில் கங்குவா படம் ரிலீஸ் ஆகும் வரை மட்டுமே அமரன் படம் தியேட்டர்களில் ஓடுவதற்கு உதயநிதி தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது அமரன் தொடர்ந்து வசூல் வேட்டை ஆடி வருகிறது.

இதனால் மலைத்து போன உதயநிதி கங்குவா படம் ரிலீஸ் ஆனாலும் அமரன் படத்திற்கு காட்சிகள் ஒதுக்குமாறு கூறி வருகிறார். இதற்கிடையில் சொன்ன தேதியில் கங்குவா படம் ரிலீஸ் ஆகுமா என்பதில் தான் இப்பொழுது சிக்கல் ஏற்பட்டுள்ளது. படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் இரண்டொரு நாட்கள் தான் இருக்கிறது.

கங்குவா படத்திற்கு எதிராக ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது. ஏற்கனவே ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரிப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 100 கோடிகள் கடன் பெற்றுள்ளது. அதில் செலுத்த வேண்டிய தொகை 55 கோடிகள் மீதம் இருக்கிறது.

இதனால் அந்த தொகையை கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்யுமாறு ரிலையன்ஸ் நிறுவனம் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் ரிலீஸ்க்கு முன்பு மீதமுள்ள தொகையை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். ஏற்கனவே அமரன் படத்தால் நல்ல லாபம் பெற்று வருகிறது ரெட் ஜெயன்ட் நிறுவனம். அடுத்தபடியாக கங்குவா படத்தை எதிர்பார்த்து வருகிறது

Nandri cinemapettai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *