உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இதைத் தெரிவித்தார். அப்போது, இந்தியா-ரஷியா இடையிலான ஒத்துழைப்பு ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு அதிகரித்து வருகிறது என்றும், இந்தியாவுக்கு விற்பனை செய்யும் ஆயுதங்களை ரஷியா வடிவமைத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். அதிவேக பொருளாதார வளர்ச்சி, பண்டைய கலாச்சாரம், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் ஒன்றரை பில்லியன் மக்கள் தொகையை கொண்ட இந்தியா, வல்லரசு நாடுகளின் சந்தேகத்திற்கு இடமின்றி சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Nandri Thanthi TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *