மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ரச்சிம் ரவிந்தரா ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்தார். ரிஷப் பண்டை தவிர ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் தடுமாறிய நிலையில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவிந்தரா அபாரமாக சுழற் பந்துவீச்சை எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார்.
இன்னும் சொல்லப்போனால் நியூசிலாந்துக்காக இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் ரச்சின் ரவீந்திரா தான். இந்த நிலையில் வங்கதேச தொடர் முடிந்தவுடன் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் பல வெளிநாட்டுக்கு சென்ற நிலையில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்தரா இந்தியாவிற்கு வந்து சிஎஸ்கே அணியின் அகாடமியில் சுழற் பந்துவீச்சை எதிர்கொண்டு பயிற்சி மேற்கொண்டார்.
ரச்சின் ரவீந்திரா, ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார் என்பதால் சிஎஸ்கே அணி அவருக்கு இந்த உதவியை செய்தது. இந்த நிலையில் இதுதான் தற்போது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய அணிக்கு எதிராக விளையாடும் வீரருக்கு சிஎஸ்கே உதவி செய்துவிட்டதாக பலரும் கூறி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தப்பா, சிஎஸ்கே அணி என்பது ஒரு குடும்பம் மாதிரி. அவர்கள் அனைத்து வீரர்களையும் நன்றாக பார்த்துக் கொள்வார்கள். இதனால்தான் ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அகாடமிக்கு வந்து பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். ஆனால் இதைவிட நாட்டின் நலன் தான் முக்கியம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சிஎஸ்கே அணி இதற்கு ஒரு எல்லைக்கோட்டை போட்டுக் கொள்ள வேண்டும் என நினைக்கின்றேன்.
நமது நாட்டுக்கு எதிராக உங்கள் அணி வீரர் விளையாட பயிற்சி மேற்கொள்ள இப்படி வசதிகளை செய்து தரலாமா என்பது குறித்து யோசிக்க வேண்டும். சி எஸ் கே அணி இவ்வாறு செய்ததில் எனக்கு எந்த ஆச்சரியமும் கிடையாது. ஏனென்றால் அவர்கள் வீரர்களின் நலனையே பாதுகாப்பார்கள். சிஎஸ்கே அணி ஒரு இரக்க குணத்துடன் இதை செய்திருக்கலாம்.
ஆனால் என்னை பொறுத்தவரையில் இது செய்திருக்கக் கூடாது. ஒருவேளை நான் தவறாக கூட பேசி இருக்கலாம். எனக்கு சிஎஸ்கே வை மிகவும் பிடிக்கும். ஆனால் நாடு தான் எனக்கு முதலில் முக்கியம் பிறகுதான் மற்றதெல்லாம். எனவே எதிர்காலத்தில் நாடு என்று வரும்போது ஒரு எல்லைக்கோட்டை போட்டுக் கொண்டு சிஎஸ்கே அதனை தாண்டக்கூடாது என்பதே எனது கருத்து என்று உத்தப்பா கூறியுள்ளார்.
Nandri mykhel