தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ, மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 210 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 06.11.2024 கடைசி தேதியாகும்.
Graduate Apprenticeship Training
காலியிடங்களின் எண்ணிக்கை: 181
B.Pharm – 5
B.Com. – 51
B.Sc. (Comp.Sci.) – 56
B.C.A – 26
B.B.A. – 35
B.Sc. (Geology) – 4
B.Sc. (Chemistry) – 4
கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023/ 2024 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை: ரூ. 12,524 (B.Pharm – 15,028)
Technician Apprenticeship Training
பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 29
D.Pharm – 4
Two year Diploma in Medical lab technology – 9
Two year Diploma in X-Ray Technician – 5
Two year Diploma in Catering Technology & Hotel Management – 11
கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023/ 2024 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட படிப்புகளில் டிப்ளமோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை: ரூ. 12,524
வயது தகுதி: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: சம்பந்தப்பட்ட கல்வி தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Office of The General Manager, Learning and Development Centre, Block-20, NLC India Limited. Neyveli – 607 803.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.11.2024
மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
Nandri indianexpress