சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் ஏ.கே. நடிப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து லோகேஷ் கனகராஜிடம் கேட்கப்பட்டது. அந்த தகவல் குறித்து அவர் சொன்ன விஷயம் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் அந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சவுபின் சாஹிர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இது தான் கதை என ஹின்ட் கூட கொடுக்க மாட்டார் லோகேஷ். அதனால் அவரிடம் இருந்து அப்டேட் வாங்குவது லேசுபட்ட காரியம் இல்லை. இந்நிலையில் தான் கூலி படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஆமீர் கான் நடிப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது.

என்ன லோகி, உங்க படத்துல பாலிவுட் ஏ.கே. நடிக்கிறாராமே, உண்மையா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் பேட்டி ஒன்றில் லோகேஷிடம் அதே கேள்வியை கேட்டுவிட்டார்கள்.

பேட்டியில் கேட்கும்போது பதில் அளிக்க முடியாமல் இருக்க முடியாது அல்லவா?. இருந்தாலும் பதில் சொன்ன மாதிரியும் இருக்கட்டும், சொல்லாத மாதிரியும் இருக்கட்டும் என்பது போன்று பதில் அளித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

ஏ.கே. பற்றி லோகேஷ் கனகராஜ் கூறியதாவது,

படத்தில் யார், யார் இருக்கிறார்கள் என்பதை தயாரிப்பு நிறுவனம் தான் தெரிவிக்க வேண்டும்.அதனால் நான் எதுவும் சொல்ல முடியாது என்றார்.

ஆமீர் கான் நடிக்கிறார் என்றும் சொல்லவில்லை. அதே சமயம் அவர் நடிக்கவில்லை என்றும் சொல்லவில்லை. எனவே, கூலி படத்தில் ஆமீர் கான் நடிக்கிறார் என்றே ரசிகர்கள் பேசத் துவங்கிவிட்டார்கள்.

1995ம் ஆண்டு ரிலீஸான Aatank Hi Aatank இந்தி படத்தில் ரஜினியும், ஆமீர் கானும் சேர்ந்து நடித்தார்கள். இந்நிலையில் கூலியில் ஆமீர் கான் இருக்கிறார் என்றால் 29 ஆண்டுகள் கழித்து அவர் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Nandri samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed