உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்த 36 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

உத்தராகண்ட்டில் 600 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.

கர்வாலில் இருந்து குமோன் பகுதிக்கு, அல்மோரா மாவட்ட மலைச்சாலை வழியாக, 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது மார்ச்சுலா பகுதியில் அந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 36 பேர் உயிரிழந்தனர், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பது தெரியவந்தது.

மீட்புப் பணிகளில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களை மீட்க ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் ராம்நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்த இருவர் ராம்நகர் மருத்துவமனையில் இருந்து ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

பேருந்து விபத்து நடந்த பகுதியான பவுரி மற்றும் அல்மோராவின் ஆர்டிஓவை இடைநீக்கம் செய்ய முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவுறுத்தியுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளார். சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்த 36 பேர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Nandri news18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *