crackers

தீபாவளியில் எதிர்பாராத விதமாக தீக்காயம் நேர்ந்தால் முதலுதவி விஷயங்களை தயார் நிலையில் வைத்திருந்தால் பெரிய அளவிலான பாதிப்பை தவிர்க்கலாம்.

தீபாவளியன்று விளக்கு ஏற்றும் போதும், பட்டாசு வெடிக்கும்போதும் பலர் கவனக்குறைவால் தீக்காயத்திற்கு உள்ளாகின்றனர். அவ்வாறு தீப்பிடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதில் பலருக்கும் தெளிவு இல்லை. எரிச்சலைக் குறைக்க பல வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் சில நேரங்களில் கொப்புளங்கள், புண், வடு என இந்த முறைகள் உங்களுக்கே தீங்கு விளைவிக்கும்.

எனவே வரும் தீபாவளியில் எதிர்பாராத விதமாக தீக்காயம் நேர்ந்தால் முதலுதவி விஷயங்களை தயார் நிலையில் வைத்திருந்தால் பெரிய அளவிலான பாதிப்பை தவிர்க்கலாம். அப்படி தீக்காயங்களில் இருந்து விரைவாக நிவாரணம் பெற என்ன வீட்டு வைத்தியம் செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

முதலில் ஓடும் நீரில் கழுவவும் : தீக்காயம் ஏற்பட்டால், முதலில் பாதிக்கப்பட்ட பகுதியை குழாயின் கீழ் தண்ணீரில் வைக்கவும். குறைந்தது 20 நிமிடங்களுக்கு அதே நிலையில் இருங்கள். ஐஸ் நீர் அல்லது ஐஸ் கட்டிகள் பயன்படுத்துவதால் தோல் திசு சேதம் ஏற்படலாம்.

தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும் : கை எரிந்தால், விரைவில் நிவாரணம் பெற, உடனடியாக ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் கலந்து, எரிந்த இடத்தில் உடனடியாக தடவவும். நீங்கள் எரியும் உணர்விலிருந்து நிவாரணம் பெறுவது மட்டுமல்லாமல், கொப்புளங்களும் ஏற்படாது.

நெய் பயன்படுத்தவும் : கையின் தீக்காய எரிச்சலை குறைக்க நெய் தடவலாம். அது தோலில் குளிர்ச்சியை அளிக்கிறது.

கற்றாழை பயன்படுத்தலாம் : கற்றாழை ஜெல் அல்லது கற்றாழை சதைப்பகுதியை சீவி அதன் ஜெல்லை தீக்காயம் பட்ட இடத்தில் தடவினால் பயன்படுத்துவதன் மூலம் எரிந்த சருமத்திற்கு நிவாரணம் அளிக்கலாம். இது சருமத்தை வேகமாக குணப்படுத்துகிறது.

கொப்புளங்களை வெடிக்க வைப்பது தவறு : தீக்காயம் தண்ணீர் சேர்ந்து கொப்புளங்களாக இருந்தால் அதை உடைத்து துடைக்கும் வேலைகளை செய்யாதீர்கள். அது தொற்றாக மாறலாம். தானாக உடைந்தாலும் துடைத்துவிட்டு கிருமிநாசினி கொண்டு துடைத்துவிடுங்கள்.

பேண்டேஜ் தவிர்க்கவும் : சிறிய காயமாக இருந்தால் ஆண்டி பயாட்டிக் வேண்டாம். தோலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களே அதை சரி செய்துவிடும். அதேபோல் பேண்டேஜ் போடுவதும் வேண்டாம்.

டூத்பேஸ்ட் தடவக் கூடாது : காயத்தின் மீது டூத்பேஸ்ட் வைப்பது போன்ற செயல்களை தவிருங்கள். அதற்கு பதிலாக தீக்காயத்திற்கான ஆயின்மெண்ட் தடவலாம்.

சூரிய வெளிச்சம் பட வேண்டாம் : பெரிய காயமாக இருந்தால் வெளியே வெயிலில் சுற்றுவதை தவிருங்கள். முதல் மூன்று நாட்களுக்கு சூரிய வெளிச்சம் படவே கூடாது. அவசரம் எனில் துணியால் மூடிக்கொள்ளுங்கள்.

அதேபோல் சிறிய காயமாக இருந்தால் வீட்டிலேயே முதலுதவி செய்துகொள்ளலாம். பெரிய காயம் எனில் நேரம் பாராமல் உடனே மருத்துவமனை விரைவது நல்லது.

 Nandri news18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *