Tamil News Live Updates-24.10.2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 221-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய வடமேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த டாணா புயல் தீவிர புயலாக நேற்று வலுப்பெற்ற நிலையில் நாளை(அக்.25) ஒடிசா- மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- Oct 24, 2024 13:41 IST4 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் பட்டியல்
புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Oct 24, 2024 13:40 IST15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- Oct 24, 2024 13:20 ISTதலைமைச் செயலக கட்டடத்தில் திடீர் விரிசல்: போலீசார் விளக்கம்
சென்னை தலைமைச் செயலகத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக பரவிய தகவல் வெளியானது. இதனால், தலைமைச் செயலக ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.
இந்நிலையில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் டைல்ஸில் விரிசல் ஏற்பட்டதாகவும், எந்த பிரச்சினையும் இல்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். வெளியே வந்த ஊழியர்களிடம் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறி உள்ளே செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல் தளத்தில், ஒரு டைல்ஸில் மட்டுமே விரிசல், வேறு எந்த பிரச்சினையும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
- Oct 24, 2024 13:17 ISTசேலம்: கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்த காவலர்கள்
சேலத்தில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை காவலர்கள் சரிசெய்துள்ளனர். சேலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் வராததால் போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர். ஒருபுறம் போக்குவரத்தை சீர்செய்தும் மறுபுறம் அடைப்பை சரிசெய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி மேற்பார்வையாளர் அலட்சியமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- Oct 24, 2024 12:50 ISTகந்த சஷ்டி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்
எதிர்வரும் நவம்பர் 2ம் தேதி தொடங்கும் கந்த சஷ்டியை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
18 இடங்களில் பக்தர்கள் தங்க தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட உள்ளன. 225 நிரந்தர கழிவறைகள், 190 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்படுகின்றன. வாகன நிறுத்தம், குடிநீர், எல்.இ.டி. திரைகள், கூடுதல் சிசிடிவி கேமராக்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன
- Oct 24, 2024 12:47 ISTஆபாசமாக பேசிய வழக்கு: காவல்துறை பதிலளிக்க கோர்ட் உத்தரவு
சென்னை மெரினா லூப் சாலையில் போலீசாரை ஆபாசமாக பேசிய வழக்கில் கைதான பெண், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “தான் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவர், தவறுக்கு தான் மன்னிப்புக் கோரியுள்ளேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
- Oct 24, 2024 12:30 IST‘கட்டிடம் உறுதியாக உள்ளது’: ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் எ.வ.வேலு
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கட்டடத்தில் திடீரென விரிசல் ஏர்பார்ப்பட்டதால், பணியில் இருந்த ஊழியர்கள் பதறியடித்து வெளியேறியுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.
முதல் தளத்தின் தரையில் இருந்த டைல்ஸில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, பரவிய வதந்தியால் ஊழியர்கள் வெளியேறியதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. அச்சமின்றி உள்ளே செல்லுமாறு ஊழியர்களை காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
“நாமக்கல் கவிஞர் மாளிகை உறுதியாக உள்ளது” என்று ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
- Oct 24, 2024 11:55 ISTதலைமைச் செயலக வளாகத்தில் திடீர் அதிர்வு; பதறியடித்து வெளியேறிய ஊழியர்கள்
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கட்டடத்தில் திடீர் அதிர்வு ஏற்பட்டது. பணியில் இருந்த ஊழியர்கள் பதறியடித்து வெளியேறியதால் பரபரப்பு
முதல் தளத்தின் தரையில் இருந்த டைல்ஸில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, பரவிய வதந்தியால் ஊழியர்கள் வெளியேறியதாக விசாரணையில் தகவல், அச்சமின்றி உள்ளே செல்லுமாறு ஊழியர்களை காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்
- Oct 24, 2024 11:25 ISTஇர்ஃபான், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; இர்ஃபான் மற்றும் மருத்துவர் மீது சட்ட ரீதியாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இர்ஃபானுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. வெளிநாட்டில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேட்டி அளித்தார்.
- Oct 24, 2024 10:39 ISTசீமான் மீது வழக்கு
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணப்பாறை அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் திருச்சி எஸ்.பி வருண்குமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- Oct 24, 2024 10:27 ISTதங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.58,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.7,285க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Oct 24, 2024 09:52 ISTசார்பதிவாளர் அலுவலங்கள், ஆர்.டி.ஓ அலுவலகங்களில் விடிய விடிய சோதனை
மாநிலம் முழுவதும் பல சார்பதிவாளர் அலுவலங்கள், ஆர்.டி.ஓ அலுவலகங்கள், தீயணைப்பு நிலையங்கள், போக்குவரத்து சோதனைச் சாவடி, வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கணக்கில் வராத பணம லட்சக்கணத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
- Oct 24, 2024 09:49 ISTமணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகரும் டாணா புயல்
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள டாணா புயல், சற்று வேகம் குறைந்து, மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்கிறது.
- Oct 24, 2024 09:23 ISTஏ.ஐ தொழில்நுட்ப கேமரா
பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களைக் கண்காணிக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல் கூறப்பட்டுள்ளது.
விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம், இதுவரை ₹18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
- Oct 24, 2024 09:19 ISTதீ பிடித்து எரிந்த அரசு பேருந்து
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து, திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்தில் இருந்து புகை வருவதை கண்டதும் சுதாரித்து கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு, தீயை அணைக்கும் பணியில், தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபடடுள்ளனர்.
- Oct 24, 2024 08:43 ISTபதிலடி கொடுக்குமா இந்தியா?
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி தீவிரம் காட்டுகிறது.
- Oct 24, 2024 08:43 ISTபெங்களூரு கட்டிட விபத்து – பிரதமர் நிவாரணம்
பெங்களூரு கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமர் மோடி நிவாரணமாக அறிவித்துள்ளார்.
- Oct 24, 2024 07:56 ISTதிருச்சியில் தொடரும் ஐ.டி ரெய்டு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான திருச்சி முசிறியில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனங்களில் நேற்று முன்தினம் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை தொடர்ந்து வருகிறது. இளங்கோவன் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக உள்ளார்.