world-anaesthesia

World Anesthesia Day| உலக மயக்கவியல் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கருத்தரங்கு நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி உலக மயக்கவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த மயக்கவியல் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது. வலி இல்லாத அறுவை சிகிச்சை சாத்தியம் என்று உலகத்திற்கு எடுத்துச் சொன்ன நாள்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் துறை, இந்திய மயக்கவியல் சங்கம் சார்பில் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் உலக மயக்கவியல் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமை வகித்தார். பின்னர் பேசிய அவர், மயக்கவியல் நிபுணர்களை கொண்டு தான் அனைத்து அறுவை சிகிச்சைகளும் நடக்கிறது. மயக்கவியல் நிபுணர்கள் இல்லை என்றால் எந்தவித அறுவை சிகிச்சையும் மேற்கொள்ள முடியாது. இந்த ஆண்டு உலக மயக்கவியல் தினத்தின் கருப்பொருளாக கேன்சர் சிகிச்சை உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் புதிதாக துவக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல் மூன்று இடத்தில் திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக ஸ்கில் லேப் திறந்து வைத்து டீன் சுகந்தி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள், மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பேசிய திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை தலைவர் பேராசிரியர் கவிதா, 1846 ஆம் ஆண்டு டபுள்யூ டி ஜி மார்டன் அவர்களால் மசாசுசெட்ஸ் பொது மருத்துவமனையில் வலி இல்லாத அறுவை சிகிச்சை சாத்தியம் என்று உலகத்திற்கு எடுத்துச் சொன்ன நாள் இன்று என கூறினார். இதற்கு முன்பு வரை வலியுடன் கூடிய அறுவை சிகிச்சை செய்யும் பொழுது மிகப்பெரிய அறுவை சிகிச்சைகள் சாத்தியமில்லாததாக இருந்தது, இதற்கு பின்பு வலியில்லாத அறுவை சிகிச்சையால் உறுப்பு மாற்று சிகிச்சை, இதயம் மாற்று சிகிச்சை என ஏராளமான அறுவை சிகிச்சைகள் எளிதாக செய்ய முடிகிறது.

இந்த சாதனைகள் எல்லாம் வலியில்லா அறுவை சிகிச்சைகளால் மட்டுமே முடிந்தது. வலி இல்லாத பிரசவம் என்று கூட கொண்டாடப்படுகிறது. வலியில்லா அறுவை சிகிச்சை சாத்தியம் என்று உலகிற்கு நிரூபிக்கப்பட்ட நாளான இன்று அக்டோபர் 16ஆம் தேதியை மயக்கவியல் மருத்துவர்கள் ஆனால் நாங்கள் கொண்டாடுகிறோம். மேலும் இன்றைய தினம் சிபிஆர் குறித்த பயிற்சி பட்டறை மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி அரசு மருத்துவமனை மயக்கவியல் துறை மற்றும் ஐ.எஸ்.ஏ திண்டுக்கல் கிளை இணைந்து நடத்துகிறோம் என்று கூறினார்.

Nandri news18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *