gaza

டெஹ்ரான்: இஸ்ரேல் – ஈரான் இடையே நடக்கும் மோதலில் அடுத்த 1 வாரம் மிக முக்கியமான வாரமாக மாறி உள்ளது. இரண்டு தரப்பு மோதலில் அடுத்த 1 வாரம் பல்வேறு சுவாரசியமான, அதிர்ச்சி அளிக்கும் மாற்றங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. அவை என்ன மாதிரியான மாற்றங்கள் என்று இங்கே பார்க்கலாம்.

1. சமீபத்தில் நடந்த ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால் இந்த போர் விவகாரமான நிலைமையை எட்டும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த வாரம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் வாய்ப்புகள் உள்ளன.

ஈரான் நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளது இஸ்ரேல். தங்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தால் மோசமான வலுவான தாக்குதலை கொடுப்போம் என்று ஈரான் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதற்கு அஞ்சாமல் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே ஈரான் – லெபனான் – இஸ்ரேல் போர் உச்சம் அடைந்து உள்ளது. இது கண்டிப்பாக உலகபோராக் மாறும் அபாயம் உள்ளது. முக்கியமாக இந்த போர் நடக்கும் பட்சத்தில் அது அணு ஆயுத போராக நடக்கும் அபாயமும் உள்ளது. 2.ஈரானின் பாலைவனத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கடுமையான விவாதங்கள் ஏற்பட்டு உள்ளது. ஈரான் அணுகுண்டு சோதனை செய்துள்ளதோ என்ற ஊகங்களை இந்த நிலநடுக்கம் தூண்டி உள்ளது.

ஈரான் அணுசக்தி சோதனை நடத்தியதா என்ற குழப்பத்தை, கேள்விகளை இந்த விவகாரம் எழுப்பி உள்ளது. அங்கே நில அதிர்வு ஏற்பட்ட காலை நேரம் மற்றும் இருப்பிடம் ஆகியவை அதிக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் இந்த நேரம் இருப்பிடம் ஒத்துப்போவதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். அணு ஆயுதத்தை ஈரான் உருவாக்கி விட்டதா அல்லது ஈரான் அணு ஆயுதத்தை வாங்கிவிட்டு அதை சோதனை செய்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஈரான் அணு ஆயுத சோதனையை மேற்கொண்டு.. அதன் முடிவுகளை இந்த வாரம் அறிவிக்க போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. 3. ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு பதிலடியாக ஈரானின் அணு உலகைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.. விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. உளவு அமைப்புகள்: தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது.

ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும். இதைத்தான் இஸ்ரேல் தாக்க முயற்சி செய்யலாம். ஈரானின் அணு உலை மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களை இஸ்ரேல் தாக்க திட்டமிடலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான சீக்ரெட் திட்டங்களை இஸ்ரேலின் மொசாத் அமைப்பு மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கணித்து உள்ளனர். ஈரான் உள்ளே அவர்களின் அணு திட்டங்களை சேதப்படுத்தும், தோல்வி அடைய செய்யும் பணிகளை இஸ்ரேல் தனது உளவாளிகள் மூலம் செய்ய தொடங்கியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

4. லெபனான் நாட்டில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது இன்னும் பயங்கரமான தாக்குதலை நடத்த ஈரான் முடிவு செய்து உள்ளதோ என்ற அச்சமும் உள்ளது. அடுத்த 1 வாரத்தில் இது போன்ற பயங்கர சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன.

நன்றி oneindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *