Bumrah

சிட்னி: இந்திய அணி நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவை ஆஸ்திரேலியா மண்ணில் எதிர்கொள்வதில் நிச்சயம் சவால் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்று ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, இதுவரை 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியா அணியின் ஒவ்வொரு வீரர்களை பற்றி இந்திய ரசிகர்களும், இந்திய அணியின் ஒவ்வொரு வீரரையும் பற்றியும் ஆஸ்திரேலியா ரசிகர்களும் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

அதிலும் ஒருபடி மேல் சென்று, இந்திய அணி வீரர்களை ஆஸ்திரேலியா அணி நட்சத்திரங்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். ஆனால் ஆஸ்திரேலியா அணி சைலன்ட்டாக இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சிறப்பாக தயாராகி வருகிறது. உஸ்மான் கவாஜா, பேட் கம்மின்ஸ், நேதன் லயன் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிராவிஸ் ஹெட் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார்.

மிட்சக் ஸ்டார்க், ஹேசல்வுட், மிட்சல் மார்ஷ், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி உள்ளிட்டோர் சிறப்பாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா குறித்து ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில், பும்ரா ஒரு மகத்தான பவுலர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தோ சந்தேகமோ கிடையாது. அவரை புதிய பந்தில் எதிர்கொண்டாலும், கொஞ்சம் பழைய பந்தில் எதிர்கொண்டாலும், இன்னும் பழைய பந்தில் பவுலிங் செய்தாலும்.. பும்ராவால் சிறப்பாக செயல்பட முடியும். எந்த மாதிரியான பந்து கையில் இருந்தாலும், சிறப்பாக செயல்படக் கூடிய தன்மையும், திறமையும் பும்ராவுக்கு உள்ளது. 3 வடிவங்களிலும் சேர்த்து பார்த்தால், பும்ரா தான் சிறந்த பவுலர் என்று அனைவரும் சொல்வார்கள்.

அதனால் ஆஸ்திரேலியா மண்ணில் பும்ராவை எதிர்கொண்டு விளையாடுவது நிச்சயம் சவால் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் பேசிய கருத்துகள் இந்திய ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் அந்த அணிக்கு எதிராக பும்ரா 14 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கிறார். அதில் மொத்தமாக 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் ஸ்டீவ் ஸ்மித்திற்கு எதிராக 5 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பும்ரா, இதுவரை 1 முறை மட்டுமே விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். 114 பந்துகளை எதிர்கொண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித், இதுவரை பும்ராவுக்கு எதிராக மட்டும் 52 ரன்களை சேர்த்துள்ளார். இம்முறை ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பும்ராவை எதிர்கொள்ள தீவிர பயிற்சியை மேற்கொள்வதோடு, பிரத்யேக திட்டங்களுடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி mykhel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *