school

Tamil Nadu Quarterly Exam 2024 Dates : தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டிற்கான காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் மாதத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் இந்தாண்டுக்கான நாட்காட்டிப்படி காலாண்டு தேர்வு எப்போது தொடங்கும் மற்றும் தேர்விற்கு பின்பு பள்ளி விடுமுறை நாட்கள் எத்தனை என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

Tamil Nadu School Quarterly Exam 2024 : தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் தொடங்கிவிட்டாலே காலாண்டு தேர்வு/ முதல் பருவ தேர்வு குறித்து மாணவர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கும். குறிப்பாக தேர்விற்கு பின்னர் விடப்படும் விடுமுறையில் குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிட தொடங்கிவிடுவர். இந்நிலையில், காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதத்தில் எப்போது தொடங்கும் மற்றும் எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பொற்றோர்களிடம் அதிகரித்துள்ளது.

காலாண்டு தேர்வு பணிகள் :

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் காலாண்டு தேர்வு/ முதல் பருவ தேர்வு நடைபெறவுள்ளது. மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி முதல் காலாண்டில் நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து வினாத்தாள் தயார் செய்யப்பட்டு தேர்வு நடத்தப்படும். வினாத்தாள் தயாரிக்க தனி ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெறும். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்கும் அனைத்து பள்ளிகளில் பொது வினாத்தாள் முறை பின்பற்றப்படுகிறது.

செப்டம்பர் மாதத்தில் அரசு விடுமுறை நாட்கள் :

தமிழக கல்வித்துறையில் 2024-25 கல்வியாண்டிற்கான நாட்காட்டி படி, செப்டம்பர் மாதத்தில் 2 அரசு விடுமுறை வருகிறது. செப்டம்பர் 7-ம் தேதி சனிக்கிழமை – விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 16-ம் தேதி திங்கட்கிழமை – மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு நாட்களும் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலாண்டு தேர்வு எப்போது தொடங்கும்?

தமிழ்நாடு கல்வித்துறை 2024-25 கல்வியாண்டு நாட்காட்டியின் படி, 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு/ முதல் பருவ தேர்வு செப்டம்பர் 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது. செப்டம்பர் 22 ஞாயிறு என்பதால் வார விடுமுறையாகும். அதனைத்தொடர்ந்து, தொடர்ச்சியாக செப்டம்பர் 28-ம் தேதி (சனிக்கிழமை) காலாண்டு தேர்வு முடிவடைகிறது.

காலாண்டு தேர்வு அட்டவணை எப்போது?

கடந்த ஆண்டு காலாண்டு தேர்வு 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு 20.09.2023 முதல் தொடங்கின. 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு 19.09.2023 முதல் தொடங்கின. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 15.09.2024 அன்று தொடங்கின. அனைத்து வகுப்புகளும் கடந்த ஆண்டு 27.09.2023 தேர்வு முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து, அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், 2024 காலாண்டு தேர்விற்கான அட்டவணை விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிடும்.

காலாண்டு விடுமுறை நாட்கள் எத்தனை?

2024 கல்வி ஆண்டிற்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து செப்டம்பர் 29-ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்கும். மீண்டும் பள்ளிகள் அக்டோபர் 3-ம் தேதி திறக்கப்படுகிறது. இதனால் இந்தாண்டு விடுமுறை நாட்கள் குறைகிறது. செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 2 வரை 4 நாட்கள் மட்டுமே வருகிறது. அதில் செப்-29 ஞாயிற்றுகிழமை ஆகும். அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை ஆகும். அப்படி என்றால் வெறும் 2 நாட்கள் மட்டும் காலாண்டு விடுமுறை கிடைக்கிறது.

நன்றி samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *