kholi

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் கோலி 8வது இடத்துக்கு முன்னேறினார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் விராத் கோலி, 737 புள்ளிகளுடன் 10வது இடத்தில் இருந்து ‘நம்பர்-8’ இடத்துக்கு முன்னேறினார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா (751 புள்ளி) 5வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இளம் இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 740 புள்ளிகளுடன் 8 வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறினார்.

பாகிஸ்தானின் பாபர் ஆசம் (734), 3வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இங்கிலாந்தின் ஜோ ரூட் (881) ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் (758), 4வது இடத்துக்கு முன்னேறினார்.

பவுலர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின், 870 புள்ளிகளுடன் ‘நம்பர்-1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். மற்ற இந்திய வீரர்களான பும்ரா (847), ரவிந்திர ஜடேஜா (788) முறையே 2, 7வது இடத்தில் தொடர்கின்றனர்.

‘ஆல்-ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா (444), அஷ்வின் (322) முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றனர்.

நன்றி dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *