iphone 16

செப்.9ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு ஆப்பிள் நிறுவன புதிய பொருட்கள் அறிமுக நிகழ்ச்சி தொடங்க உள்ளது. ஐபோன்16, ஐஃபோன் 16 பிளஸ், ஐபோன் 16 புரோ, ஐபோன் புரோ மேக்ஸ் என 4 ரகங்களில் இந்தாண்டு ஐபோன் 16 போன்கள் வெளியாக இருக்கின்றன.

பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், தனது அடுத்த புதிய செல்போனான ஐபோன்16ஐ செப்.9ஆம் தேதி அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்திய நேரப்படி செப்.9ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு ஆப்பிள் நிறுவன புதிய பொருட்கள் அறிமுக நிகழ்ச்சி தொடங்க உள்ளது. ஐபோன்16, ஐஃபோன் 16 பிளஸ், ஐபோன் 16 புரோ, ஐபோன் புரோ மேக்ஸ் என 4 ரகங்களில் இந்தாண்டு ஐபோன் 16 போன்கள் வெளியாக இருக்கின்றன.

புதிய ரக ஐபோன்களில் புகைப்படங்களை எடுக்க பிரத்யேக பட்டன் வரலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ச் சீரிஸ் 10, அல்ட்ரா 3 ஆகிய வாட்ச் ரகங்களையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட உள்ளது.

இரண்டாம் தலைமுறை ஏர்பாட் மேக்ஸ் மற்றும் புதிதாக இரண்டு ரக ஏர்-பாட்களும் வரும் 9ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு “குளோ டைம்” என ஆப்பிள் நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது.

நன்றி news18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *