india cricket

ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட். சிறந்த அதிரடி பேட்ஸ்மேன். அவர் தொடக்க வரிசையில் விளையாடியவர்.

2003 மற்றும் 2007-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அவர் இடம் பெற்று இருந்தார்.

இந்த நிலையில் சிறந்த 3 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை ஆடம் கில்கிறிஸ்ட் வெளியிட்டுள்ளார். அதில் டோனி இடம் பெற்றுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

டோனி கிரிக்கெட்டின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். அவரது அமைதியை நான் எப்போதும் விரும்புகிறேன். டோனி அதை அவர் வழியில் செய்தவர். ஆனால் டோனிக்கு முன்பு ரோட்னி மார்ஷ் தான் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். அவர் தான் எனது முன் மாதிரி ஆவார்.

இந்த வரிசையில் இலங்கையை சேர்ந்த சங்ககாரா 3-வதாக இருக்கிறார். அவர் எல்லாவற்றிலும் மிகவும் கம்பீரமாக இருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும். டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும். ஆஸ்திரேலியா உள்நாட்டில் விளையாடுவதில் ஆதிக்கம் நிறைந்தது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் எப்படி வெற்றி பெறுவது என்பது இந்தியாவுக்கு தெரியும்.

இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

1970 முதல் 1984 வரை ஆஸ்திரேலிய அணிக்காக 96 டெஸ்டில் ரோட்னி மார்ஷ் விளையாடியுள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 2 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இருந்தது. தற்போது ஹாட்ரிக்குக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி maalaimalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *