post master

India Post GDS Result 2024 : வெளியானது அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் பணியிட முடிவுகள் – உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா..? முழு விவரம்..!

India Post Office GDS Results 2024 : இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Gramin Dak Sevaks) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை ஜூலை 15 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை பெறப்பட்டது. இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களின் முடிவுகள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. முடிவுகளை தெரிந்துகொள்ளுவது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

44,228 போஸ்ட் மாஸ்டர் பணியிடங்கள் :
இந்திய அஞ்சல் துறை ளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளில் தேசிய அளவில் 44,228 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3,789 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பதவிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

தமிழ்நாட்டில் 3,789 காலிப்பணியிடங்கள் :
தமிழ்நாட்டில் உள்ள 3,789 காலிப்பணியிடங்களில் பொதுப் பிரிவில் 1,794, ஒபிசி பிரிவ்ல் 861, எஸ்சி பிரிவில் 621, எஸ்டி பிரிவில் 37, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் 358, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 118 என்ற வகையில் நிரப்பப்படுகிறது. கிராமின் டக் சேவக் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். கூடுதலாக வயது வரம்பு சலுகையும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *