earthquak

 

 

தைபே: தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ரிக்டர் அளவில் 6.3 என பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பலமாக குலுங்கியுள்ளன. இருப்பினும் என்ன மாதிரியான சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது குறித்த தகவல்கள் இன்றும் வெளியாகவில்லை.

தைவானிலிருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள கிழக்கு நகரமான ஹுவாலினில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஹுவாலினில் பூமிக்கு அடியில் சுமார் 9.7 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று ஏற்கெனவே மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தது. அந்த வகையில் இது இரண்டாவது நிலநடுக்கமாகும்.

இதில், கட்டடங்கள் குலுங்கியுள்ளன. இருப்பினும் உயிரிழப்புகள், பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சுரங்க பாதைகளில் போக்குவரத்துகள் மிதமான வேகத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பூகோள ரீதியாக தைவான் நகரம் இரண்டு பூமி தகடுகளின் நுணியில் அமைந்துள்ளது. எனவே அடிக்கடி நிலநடுக்கத்திற்கு ஆளாகிறது.

கடந்த ஏப்ரலில் இங்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 9 பேர் பலியாகியிருந்தனர். அதேபோல 900க்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். டெக்டானிக் பிளேட்டுகளின் நகர்வுகளே நிலநடுக்கம் ஏற்படுவதற்கு பொதுவான காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது பூமியின் மீது நிலத்தட்டுக்கள் இருக்கின்றன. இதைத்தான் விஞ்ஞானிகள் டெக்டானிக் பிளேட் என்று கூறுகின்றனர். ஒரு காலத்தில் இவை அனைத்தும் இணைந்து ஒரே தட்டாக பெரிய நிலப்பரப்பாக இருந்தது. ஆனால், கால மாற்றத்தில் இது உடைந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கமாக சென்றுவிட்டது. இப்படித்தான் ஏழு பெரும் கண்டனங்கள் உருவாகின.

நன்றி oneindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *