TNEA Counselling 2024 : தமிழ்நாடு பொறியியல் படிப்புக்கான 2024 சேர்க்கை பொது கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. முதல் சுற்று முடிவடைந்த நிலையில், இரண்டாம் சுற்று சாய்ஸ் ஃபில்லிங் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியானது. அதனைத்தொடர்ந்து, சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 27ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து, பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 29ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் சுற்றில் 12,747 பேருக்கு இடஒதுக்கீடு :
3 சுற்றுகளாக நடைபெறும் பொது கலந்தாய்வின் முதல் சுற்றில் பங்கேற்க 26,654 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 21,408 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். அவர்களில் 6,870 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணையும், 10,890 பேருக்கு இறுதி ஒதுக்கீடு ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவில் 1,406 பேர் அமைக்கப்பட்டு, விருப்ப இடங்கள் தேர்வு செய்த 1,250 பேரில் 835 பேருக்கு இறுதி ஆணையும். 323 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்கல்வி பாடப்பிரிவினருக்கான பொது கலந்தாய்வில் 889 பேருக்கு இறுதி ஒதுக்கீடு ஆணையும், 165 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 27 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணையும், 133 பேருக்கு இறுதி ஒதுக்கீடு ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 12,747 பேருக்கு இட ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வு இரண்டாம் சுற்று – செய்யக்கூடாதாத தவறுகள் என்ன?
இந்நிலையில், பொது கலந்தாய்வின் இரண்டாம் சுற்று சாய்ஸ் ஃபில்லிங் தொடங்கியுள்ளது. இரண்டாம் சுற்றுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் சாய்ஸ் ஃபில்லிங் செய்வதற்கு முன்பு https://www.tneaonline.org/ இணையத்தளத்தில் முதல் சுற்றுக்கு பின்னர் உள்ள இடங்களுக்கான பட்டியலை பார்க்கவும். அதில் அண்ணா பல்கலைக்கழகம் உட்பட இதர இடங்களில் உள்ள சீட்களில் நீங்கள் விரும்பும் பாடப்பிரிவிற்கு ஏற்று இருக்கும் இடங்களை குறித்து வைக்கவும். நீங்கள் விரும்பும் பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.