gemma

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே புரட்டிப்போட்டு வருகிறது. இந்த வரிசையில் GPT-3.5, Mistral AI போன்றவை மாஸ்காட்டி வந்த நிலையில், இதை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில் கூகுள் Gemma 2 2B எனும் AIஐ களமிறக்கியுள்ளது. இதை ஸ்மார்ட் போன்களிலும் ஈஸியாக பயன்படுத்தலாம்.

அறிவு மனிதர்களின் சொத்தாக கருதப்பட்டு வந்த நிலையில், இன்று இது மெஷின்களின் சொத்தாக மாறியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், எந்த AI அதிக அறிவை கொண்டிருக்கிறதோ அதற்குதான் மவுசு அதிகம். அந்த வகையில், சமீப காலமாக Chat GPT-3.5, Mistral AIன் Mistral-8x7B போன்றவை மாஸ்காட்டி வந்தன. இதில் ஏராளமான தகவல்கள் இருக்கும். எதைப்பற்றி கேட்டாலும் விவரங்கள் கிடைக்கும் என்பதால் இதற்கு மவுசு அதிகமாக இருந்தது.

ஆனால் இதிலும் சில பின்னடைவுகள் இருந்தன. குறிப்பாக ஸ்மார்ட் போன்களில் இதை லிமிட்டாகதான் பயன்படுத்த முடியும். கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பயன்படுத்தும் அளவுக்கு செல்போன்களில் இதை வீரியமாக பயன்படுத்த முடியாது. பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன்களைதான் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, மேற்குறிப்பிட்ட AIக்களை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தன. இதற்கு மாற்றாக கூகுள் புது ஐயிட்டத்தை களமிறக்கியுள்ளது.

அதாவது கடந்த 2010ம் ஆண்டு டீப்மைண்ட் (DeepMind) எனும் நிறுவனம் தொடங்கப்பட்டது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமாகும். இதை கடந்த 2014ம் ஆண்டு கூகுள் வாங்கியது. தற்போது இந்நிறுவனம் பிரிட்டனிலிருந்து இயங்கி வருகிறது. பிரிட்டன் மட்டுமல்லாது கனடா, பிரான்சிலும் ஆய்வகத்தை வைத்திருக்கிறது. இந்நிலையில், மனித மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை புரிந்துக்கொள்ளுதல், சிக்கலான, நிச்சயமற்ற சூழல்களில் முடிவெடுத்தல் போன்ற திறன்களுடன் AIக்களை கூகுளின் டீப்மைண்ட் உருவாக்கியுள்ளது. இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து தற்போது ‘Gemma 2 2B’ எனும் புதிய AI-ஐ வெளியிட்டிருக்கிறது. இதனை ஸ்மார்ட் போனிலும் முழு வீரியமாக பயன்படுத்த முடியும் என்பதே இதன் சிறப்பம்சம்.

மட்டுமல்லாது Chat GPT-3.5, Mistral AIன் Mistral-8x7B போன்றவற்றைவிட ‘Gemma 2 2B’ 10 மடங்கு சிறப்பாக செயல்படும். எனவே இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். கடந்த காலங்களில் AI உலகில் கூகுள் மிக மோசமான படைப்புகளை கொடுத்திருந்தது. குறிப்பாக Google DeepMind Gemma 2 9B மற்றும் 27B மாடல்கள் பெரும் வரவேற்பை பெறாமலேயே இருந்துவிட்டது. காரணம் இதை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த முடியாது என்பதுதான். இப்படி இருக்கையில் தற்போது களமிறக்கப்பட்டிருக்கும் ‘Gemma 2 2B’ நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்று கூகுள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. எல்லாம் ஓகே இந்த ‘Gemma 2 2B’ என்ன செய்யும் என்று கேட்கிறீர்களா? இது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும். பதில்களை புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் இணையதளங்களிலிருந்து தேடி எடுத்து கொடுக்கும். மட்டுமல்லாது நீங்கள் ஏதாவது ஒரு தலைப்பை கொடுத்தால் அந்த தலைப்பில் ஒரு உரையை உருவாக்கி கொடுக்கும். அதேபோல மொழி பெயர்ப்புகளை துல்லியமாக செய்யும்.

சுருக்கமாக சொல்வதெனில் Google Search, Google Assistant, Google Translate, Content generation tools ஆகியவை செய்யும் அனைத்து வேலைகளையும், இந்த ‘Gemma 2 2B’ செய்துவிடும்.

நன்றி OneIndia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *