education

Tamil Nadu Archives 1 year Research Programme : 

தமிழ்நாடு ஆவணக்காப்பகம் உதவித்தொகையுடன் கூடிய 1 வருட ஆராய்ச்சியை மேற்கொள்ள அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரலாறு, சமூக அறிவியல், தமிழ், தொடர்புடைய துறைகளில் முதுகலைப் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Archives 1 year Research Programme : தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் வரலாறு, சமூக அறிவியல், தமிழ் மற்றும் தொடர்புடைய துறைகளில் உதவித் தொகையுடன் கூடிய ஒரு வருட ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும், முதுகலை பட்டப்படிப்பை முடித்த கல்வியாளர்களிடமிருந்து சென்னை எழும்பூர், ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரால் விண்ணப்பங்கள் வரவேற்கபப்டுகின்றன.

தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி பிரிவு சுமார் 3 நூற்றாண்டுக்கான வரலாற்று ஆவணங்களை பாதுகாத்து வருகிறது. 1856 ஆம் ஆண்டு வரை மெட்ராஸ் மாகாணத்தில் அரசு முதல் தற்கால ஆவணங்களை வரை தமிழ்நாடு ஆவணக்காப்பாகத்தில் உள்ளது. கல்வி, மக்கள், சுகாதாரம், சட்டம், பொருளாதாரம், ரயில்வே, விவசாயம் போன்ற ஆங்கில ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு துறை சார்ந்த ஆவணங்கள் மற்றும் தரவுகளை இங்கு அறிந்துகொள்ள முடியும். தமிழ்நாடு சட்டப்பேரவை உரையாடல்கள், அரசு நாளிதழ்களும் இங்கு பாதுகாக்கப்படுகிறது. மேலும், பழமையான புத்தகங்களும் இங்கு உள்ளது. வரலாற்றாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியவர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஆவணக்காப்பகத்தில் ஆராய்ச்சி ஹால் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு வருட ஆராய்ச்சி :
இந்நிலையில், இங்கு 1 வருட ஆராய்ச்சியை உதவித்தொகையுடன் மேற்கொள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம், ஆர்வமுள்ள முதுகலை பட்டதார்கல் ஆவணக்காப்பகத்தின் தொன்மையான ஆவணங்களை ஆராய்ந்து, சமூகத்திற்குப் பயனளிக்கக்கூடிய வகையில் தங்களது ஆராய்ச்சியினை மேம்படுத்திக் கொள்வதற்கும், தமிழ் நாட்டின் சமூக வரலாற்றினை வெளிக் கொணர்வதற்கும் உதவுவதாகும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
வரலாறு, சமூக அறிவியல், தமிழ், தொடர்புடைய துறைகளில் முதுகலைப் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு ஆண்டு முழு நேர ஆராய்ச்சியாளராக இருக்க வேண்டும். தகுதியுள்ள 4 பேருக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் உள்ள ஆவணக்காப்பகத்தில் ஆணையர் கீழ் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். சமூகம் மற்றும் பொருளாதார உருவாக்கம், இந்திய வரலாறு, நகரப்புற வரலாறு, பெண்கள் வரலாறு, சமூக நிகழ்வுகள், விடுதலை போராட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாறு உள்ளிட்டவற்றில் ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம்.

நன்றி samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *