cricketors

கோலி, ரோஹித்துக்கு ஆப்பு வைத்த கம்பீர்.. 9 ஆண்டுகள் கழித்து உள்ளூர் போட்டியில் ஆட சொன்ன கோச்

மும்பை: இந்தியா கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே உள்ளூர் போட்டிகளில் ஆடுவதை நிறுத்திவிட்டனர். அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். பல சமயம் சிறய அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கு முன் வலைப்பயிற்சிகளில் கூட அவர்கள் ஈடுபடுவதில்லை.

அவர்களின் அனுபவம் காரணமாக தங்களால் உள்ளூர் போட்டிகளில் ஆடாமலேயே சர்வதேச அளவில் சிறப்பாக விளையாட முடியும் என்பதையும் நிரூபித்து உள்ளனர். இதற்கு முன் ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளர்களாக இருந்தபோது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை உள்ளூர் போட்டிகளில் ஆடுமாறு கூறியதில்லை.

ஆனால், தற்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கவுதம் கம்பீர் அனைத்து இந்தியர்களையும் உள்ளூர் போட்டிகளில் ஆடுமாறு கூறி இருக்கிறார். இந்திய அணி அடுத்து வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. செப்டம்பர் 19 அன்று சென்னை சேப்பாக்கத்தில் அந்த தொடரின் முதல் போட்டி தொடங்க உள்ளது. அந்தப் போட்டிக்கு முன் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் டிராபியில் விளையாட வேண்டும் என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து துலீப் ட்ராபியின் முதல் சுற்று ஆட்டத்தை விட்டு விட்டு இரண்டாவது சுற்றில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 9 ஆண்டுகளாக ரோஹித் சர்மா உள்ளூர் போட்டிகளில் ஆடவில்லை. விராட் கோலி 2012இல் தான் கடைசியாக ரஞ்சி ட்ராபி டெஸ்ட் தொடரில் ஆடி இருந்தார். இந்த நிலையில், புதிய பயிற்சியாளர் கம்பீரின் கட்டுப்பாடால் இவர்கள் இருவரும் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளனர்.

செப்டம்பர் 5 அன்று முதல் சுற்று போட்டிகளும் செப்டம்பர் 12 அன்று இரண்டாவது சுற்று போட்டிகளும் தொடங்க உள்ளன விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை தவிர்த்து சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, கே எல் ராகுல், அக்சர் பட்டேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ் போன்ற பிற டெஸ்ட் அணி பேட்ஸ்மேன்களும் துலீப் ட்ராபி தொடரில் விளையாட உள்ளனர். பும்ராவுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நன்றி mykhel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *