ரியல்மீ நிறுவனமானது 5 நிமிடங்களில் ஒரு ஸ்மார்ட்போன் பேட்டரியை அதிவேகமாக சார்ஜ் செய்யக்கூடிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட உயர்ரக ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் 45W வரையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையே தங்களது ஸ்மார்ட்போன்களில் கொடுத்து வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மீ 320W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது ஷாவ்மி நிறுவனம் அறிமுகப்படுத்திய 300W அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை விட வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
5 நிமிடங்களில் முழுமையான சார்ஜிங்:
இந்த தொழில்நுட்பத்தின் மூலம், 4,420mAh பேட்டரி கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை வெறும் 4 நிமிடங்கள் 30 நொடிகளில் சார்ஜ் செய்துவிட முடியும் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். தற்போது வரை அறிமுகப்படுத்தப்பட்டதிலேயே அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் இதுதான்.
ஷாவ்மியும் 5 நிமிடங்களுக்குள் ஒரு ஸ்மார்ட்போன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்து காட்டியிருக்கிறது. ஆனால், அது 4000mAh திறன் கொண்ட பேட்டரி மட்டுமே.
நன்றி samayam