tech

ஜியோ, ஏர்டெல் தலையில் இடியை இறக்கிய பிஎஸ்என்எல்! 3300 ஜிபி டேட்டாவின் விலை அதிரடியாக குறைப்பு

சென்னை: சமீபத்தில் ஜியோ, ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் கட்டண தொகையை அதிரடியாக உயர்த்தியுள்ள நிலையில், பலரும் பிஎஸ்என்எல் நோக்கி நகர்ந்திருக்கின்றனர். இதற்கு ஏற்ப பிஎஸ்என்எல் தனது கட்டணத்தை குறைத்திருக்கிறது. குறிப்பாக ஃபைபர் இணைப்பில் 3300 ஜிபி டேட்டா பேக்கின் விலையை, முந்தைய விலையிலிருந்து 100 ரூபாய் குறைத்திருக்கிறது. இதனால் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் அதிருப்தியடைந்துள்ளன.

ஆங்கிலத்தில் மோனோபோலி (Monopoly) என்று ஒரு வார்த்தை இருக்கிறது. இதற்கு ஏகபோகம் என்று அர்த்தம். அதாவது, தொலைத்தொடர்பு சேவையை இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், ஏர்செல், வோடபோஃன், ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதில், ஜியோ மேற்கொண்ட பல நடவடிக்கைகள் மற்ற நிறுவனங்களை பெரிதும் பாதித்தது. அதாவது, தொடர்ந்து 3 மாதங்களுக்கு இணயை வசதி இலவசம் என்று ஜியோ களத்தில் இறங்கியது.

இதனால் ஏர்செல் கடுமையாக அடிவாங்கியது. ஒரு கட்டத்தில் களத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் போட்டியிலிருந்து விலகிக்கொண்டது. இதனையடுத்து பெரும் பாதிப்பை சந்தித்த நிறுவனங்கள் வோடபோஃன், ஐடியாதான். போட்டியை தனியாக எதிர்கொள்ள முடியாத இவர்கள், கைகோர்த்து VI என உருவாகினர். ஏர்டெல்லுக்கும் அடி விழுந்தது. ஆனால் அதை எதிர்கொள்ளும் அளவுக்கு பொருளாதார வசதி இருந்ததால் மீசையில் மண் ஒட்டவில்லை என காட்டிக்கொண்டது. இதுதான் மோனோபோலியின் அர்த்தம். 

ஆனால் இவை எல்லாவற்றையும் விட பெரும் தாக்கத்தை எதிர்கொண்ட நிறுவனம் பிஎஸ்என்எல்தான். இது ஒரு பொதுத்துறை நிறுவனம். அப்படியெனில் இதனை வளர்த்தெடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், இன்று வரை பிஎஸ்என்எல்-க்கு 4G சேவை வழங்காமல்தான் இருந்து வருகிறது. அரசு துறை நிறுவனத்தை மறுத்துவிட்டு மற்ற தனியார் நிறுவனங்களுக்கு அதிவேக 4G சேவையை வழங்கியது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பிஎஸ்என்எல்-ஐ விட்டு வெளியேறினர். நிறுவனத்தை நடத்துவதற்கு தேவையான நிதியில் குறைந்தபட்சம்தான் ஆண்டுதோறும் ஒதுக்கப்பட்டது. புதிய ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்டனர். விளைவு, பிஎஸ்என்எல் விரைவில் சிக்னல் பிரச்னையை எதிர்கொள்ள தொடங்கியது. 

இருப்பினும் நம்பிக்கையை விட்டுவிடவில்லை. காலம் கனியும் என்று அது காத்திருந்தது. அதேபோல இப்போதைய சூழல் மாறியிருக்கிறது. அதாவது ஜியோ உட்பட பல தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களை உயர்த்தி அறிவித்திருக்கிறது. இது சாமானிய மக்களை நேரடியாக தாக்கியிருக்கிறது.

இந்தியாவில் அதிக அளவில் மக்கள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துகிறார்கள். எனவே இன்டெர்நெட் கனெக்ஷன் அடிப்படை இருப்பினும் இவ்வளவு விலை கொடுத்து இணைய வசதியை பெறும் நிலையில் சாமானிய மக்கள் இல்லை. எனவே பிஎஸ்என்எல்-ஐ நோக்கி நகர தொடங்கியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர தொடங்கியுள்ளது. 

எனவே இந்த சூழலை சாதகமாக்கிக்கொள்ள முடிவெடுத்த பிஎஸ்என்எல், தனது கட்டண தொகையை குறைத்து அறிவித்திருக்கிறது. அதாவது பிராட்பேண்ட் இணைப்பில் 3300 ஜிபியை ரூ.499க்கு பிஎஸ்என்எல் வழங்கி வந்திருந்தது. இந்த கட்டணத்தில் ரூ.100 தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ரூ.399க்கு ஒரு நாளைக்கு 110 GB என மாதம் 3300 GB டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நன்றி oneindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *