TN Government Mega Job Fair 2024 : தமிழ்நாடு அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கோயம்புத்தூர், திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. முன்னணி நிறுவனங்களில் உள்ள 24,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இந்த முகாமின் மூலம் நிரப்பப்படவுள்ளது.
வேலைவாய்ப்பு முகாமில் யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, தொழில்நுட்ப இளங்கலை, ஐடிஐ டிப்ளமோ நர்சிங் பார்மஸி, முதுநிலைப்பட்டபடிப்பு, பொறியியல் என கல்வித்தகுதி உடையவர்கள் நேரில் கலந்துகொள்ளலாம். முகாமிற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்பம், கல்விச் சான்றிதழ்கள் ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு ஆகியவற்றை எடுத்து செல்லவும்.
முகாமின் சிறப்பு அம்சங்கள் :
திருவண்ணாமலையில் 120-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்துகொள்கின்றனர். இந்த முகாம் மூலம் 7,000 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். கோயம்புத்தூரில் 250-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களில் உள்ள 15,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. திருநெல்வேலியில் 2,000 காலிப்பணியிடங்கள் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் நிரப்பப்படவுள்ளது.
இளைஞர்களுக்கு அழைப்பு
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பணி வாய்ப்பை பெறலாம். மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை – 94440 94363, 9597163102, கோயம்புத்தூர் – 7092182372, 9894296378, 6381590373, 9715559898, 9790199681 மற்றும் திருநெல்வேலி – 0462 2902248 என்ற தொலைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து கொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
நன்றி samayam